பொது செய்தி

தமிழ்நாடு

டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் பதவி உயர்வு; எதிர்பார்ப்பில் வருவாய் அலுவலர்கள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை : தகுதியானவர்களுக்கு டி.ஆர்.ஓ., (மாவட்ட வருவாய் அலுவலர்), துணை கலெக்டர் பதவி உயர்வு அரசு விரைந்து வழங்க வேண்டும், என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கொரோனா எதிரொலியாக பல்வேறு துறைகளில் பதவி உயர்வு தள்ளி போகிறது. வருவாய்த்துறையில் ஏராளமான டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியானவர்கள் இருந்தும் பதவி உயர்வு

மதுரை : தகுதியானவர்களுக்கு டி.ஆர்.ஓ., (மாவட்ட வருவாய் அலுவலர்), துணை கலெக்டர் பதவி உயர்வு அரசு விரைந்து வழங்க வேண்டும், என தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கொரோனா எதிரொலியாக பல்வேறு துறைகளில் பதவி உயர்வு தள்ளி போகிறது. வருவாய்த்துறையில் ஏராளமான டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியானவர்கள் இருந்தும் பதவி உயர்வு வழங்கப்படாததால் பணி ஓய்வு பெறுகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் திருவண்ணமாலை மாவட்டம் செய்யாற்றில் கூடி ஆலோசித்தனர்.

மதுரையில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் முருகையன் கூறியதாவது: மே 11 ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இறந்த அலுவலர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பணி ஓய்வு வயதை மீண்டும் 58 ஆக்க வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும்.

பதவி உயர்வு பயிற்சியிலிருந்து கொரோனாவால் விலக்கு அளிக்க வேண்டும்.முதல்வர் அறிவித்தபடி புதிய மாவட்டங்கள், கோட்டங்கள், வருவாய் வட்டங்கள், உள்வட்டங்களை உருவாக்க வேண்டும். தகுதியானவர்களுக்கு டி.ஆர்.ஓ., துணை கலெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 18 ல் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடிவு செய்துள்ளோம் ,என்றார். மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பாண்டியன், கோபி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X