பொது செய்தி

தமிழ்நாடு

செயல்பாட்டு திறன் மதிப்பீடு விவகாரம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை : செயல்பாட்டு திறன் மதிப்பீடு (பி.ஏ.எஸ்.,) விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.மதுரையில் சங்க பொது செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: ரகசிய கோப்பு முறை அமலில் இருந்த காலங்களில் உயர் அலுவலர்களுக்கு பிடிக்காதவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதுபோன்ற

மதுரை : செயல்பாட்டு திறன் மதிப்பீடு (பி.ஏ.எஸ்.,) விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் சங்க பொது செயலாளர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: ரகசிய கோப்பு முறை அமலில் இருந்த காலங்களில் உயர் அலுவலர்களுக்கு பிடிக்காதவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் தான் 1976ல் ரகசிய கோப்பு முறை அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ஒழிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் காலத்தில் கொல்லை புறமாக அம்முறையை கொண்டு வர உயர் அலுவலர்கள் முயற்சிக்கின்றனர்.

மத்திய அரசு சம்பள குழு பரிந்துரை அடிப்படையில் செயல் திறன்படி மதிப்பீடு முறையை (பி.ஏ.எஸ்.,) மத்திய அரசு ஊழியர்களுக்கு 2017 முதல் அமல்படுத்தியது. அதை பல மாநிலங்கள் ஏற்கவில்லை. 2019 தமிழகத்தில் புதிய சம்பள மாற்றத்தை அமல்படுத்திய அ.தி.மு.க., அரசு செயல்பாட்டு திறன் மதிப்பீடு முறையை நிராகரித்தது. இம்முறையை அமல்படுத்த முதலில் தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்க வேண்டும்.

எவ்வாறு அமல்படுத்துவது என மனித வள மேலாண்மை துறையின் செயலர் அரசாணை வெளியிட வேண்டும். அதனடிப்படையில் தான் அனைத்து துறைகளும் அம்முறையை அமல்படுத்த முடியும். அம்முறையை அமல்படுத்த டி.ஜி.பி., உள்ளிட்ட எந்த துறை தலைமைக்கும் அதிகாரம் இல்லை. எனவே அதை திரும்பப்பெற வேண்டும், என்றார். நிர்வாகிகள் ஜெயராஜராஜேஸ்வரன், கல்யாணசுந்தரம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X