இலவச 'காஸ்' இணைப்பு திட்டம்: உ.பி.,யில் ஓட்டுகளை அள்ள வியூகம்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இலவச சமையல், 'காஸ்' இணைப்பு திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்கிறது மத்திய அரசு.'உஜ்வாலா'உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இங்கு சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது. 'உஜ்வாலா' எனப்படும் இலவச சமையல்
PM Modi, Launch, Ujjwala_2, UP, 10 August, பிரதமர், மோடி, இலவச காஸ் சிலிண்டர், திட்டம், உபி, உத்தர பிரதேசம், துவக்கம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இலவச சமையல், 'காஸ்' இணைப்பு திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்கிறது மத்திய அரசு.


'உஜ்வாலா'


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் இங்கு சட்ட சபை தேர்தல் நடக்க உள்ளது. 'உஜ்வாலா' எனப்படும் இலவச சமையல் காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் 2016ல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. உத்தர பிரதேசத்தின் பாலியாவில் நடந்த விழாவில் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த 2017ல் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் பா.ஜ., மிகப் பெரும் வெற்றி பெறுவதற்கு இந்த திட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.


latest tamil news



இதுவரை 1.47 கோடி குடும்பங்களுக்கு இந்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மாநில மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகம். நாடு முழுதும் எட்டு கோடி இணைப்புகள் வழங்கப்பட்டதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிக பயன் பெற்றுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது இந்த இலவச இணைப்பு பெற்றவர்களுக்கு மூன்று சிலிண்டர் இலவசமாக வழங்குவதாக மோடி அறிவித்திருந்தார். அதன்படி மாநிலத்தில் 2.71 கோடி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை துவக்கி வைக்கப்பட உள்ளது. உத்தர பிரதேசத்தின் மகோபாவில் இது துவக்கப்பட உள்ளது.


எதிர்பார்ப்பு


இரண்டாம் கட்டத்தில் ஒரு கோடி இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்துக்கு இதில் பெரும் பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை அள்ள முடியும் என பா.ஜ., தலைமை நம்புகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-ஆக-202121:48:41 IST Report Abuse
bal இந்த இலவசம் எப்போது ஒழியுமோ...நாம கொடுக்கற வரி பணத்தை இந்த ஆளுங்க இலவசமா கொடுத்து பதவிக்கு வரானுக.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-ஆக-202110:06:10 IST Report Abuse
Natarajan Ramanathan தேசவிரோத தீய சக்திகளை முறியடித்து பாஜக வெற்றிபெற எதையும் செய்யலாம்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஆக-202109:46:23 IST Report Abuse
R.RAMACHANDRAN இவர்கள் வாக்காளர்களை கவர்ந்து ஆட்சியில் நீடிக்க தகுதியில்லாத ஏமாற்றுப் பேர்வழிகளுக்கெல்லாம் இலவச எரிவாயு கொடுத்து தகுதியானவர்கள் பெரும் ஏறி வாயுவிற்கு மானியம் இல்லாமல் செய்ததுதான் மோடி நடத்தும் நேர்மையான ஆட்சிக்கு இலக்கணம்.
Rate this:
kumar c - bangalore,இந்தியா
09-ஆக-202111:30:15 IST Report Abuse
kumar cவரி கட்டுவான் ஆன ரேஷன் வாங்குவான். கார்ல போவன் ஆனா 1000 ரூபா வரிசைல நிப்பான். நம மட்டும் வாழனும் நினைகாதுங்க. இல்லதவங்களும் வாழட்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X