நாடு முழுவதும் 5000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் அமைப்புகள் விருதுகளுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன...

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
கர்நாடகாவில் செயல்படும், 'இந்திரா கேன்டீன்'களின் பெயர்களை, 'அன்னபூர்ணேஸ்வரி கேன்டீன்' என, அந்த மாநில புதிய முதல்வர் பொம்மை மாற்ற வேண்டும்.- பா.ஜ., தேசிய செயலர் ரவி'நாடு முழுவதும், 5,000த்திற்கும் மேற்பட்ட அமைப்புகள், இடங்கள், விருதுகளுக்கு நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி, 'அடேங்கப்பா...' என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது...' என,
நாடு முழுவதும் 5000த்துக்கும் மேற்பட்ட இடங்கள் அமைப்புகள் விருதுகளுக்கு நேரு இந்திரா ராஜிவ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன...

கர்நாடகாவில் செயல்படும், 'இந்திரா கேன்டீன்'களின் பெயர்களை, 'அன்னபூர்ணேஸ்வரி கேன்டீன்' என, அந்த மாநில புதிய முதல்வர் பொம்மை மாற்ற வேண்டும்.
- பா.ஜ., தேசிய செயலர் ரவி


'நாடு முழுவதும், 5,000த்திற்கும் மேற்பட்ட அமைப்புகள், இடங்கள், விருதுகளுக்கு நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி, 'அடேங்கப்பா...' என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் ரவி அறிக்கை.வரும் உள்ளாட்சி தேர்தலில், அனைவரும் ஒற்றுமையுடன், யார் வெற்றி பெற வாய்ப்புள்ளதோ அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்து, அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி


'இப்படி முன்கூட்டியே பேசி வைத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு விருப்பமானவர்களை களம் இறக்கி விட முடியும் என தெரிந்து, பேசி வைக்கிறீர்களோ என்ற சந்தேகம், கட்சியினருக்கு வந்து உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு.நம்பூதிரிபாட், புத்ததேவ் பட்டாச்சார்யா, மாணிக் சர்க்கார், வாசுதேவன் நாயர், அச்சுதமேனன் ஆகியோரை தலைவராக கொண்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு, ஜாதி அறிவியலுக்கு புறம்பானது என தெரியாமல் போனது எப்படி?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


latest tamil news
'இவர்கள் நேரத்திற்கு நேரம் மாற்றிப் பேசுபவர்கள். இக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், இன்னமும் ஜாதிப் பெயர்களுடன் தான் அழைக்கப்படுகின்றனர் என்பதை பக்குவமாக மறைத்துக் கொள்வர்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.சாதனையாளர்களுக்கு அவர்களின் ஜாதி அடையாளம் கிடையாது; அவர்கள் செய்த சாதனை தான் அடையாளம். எனவே, பெயர்களில் ஜாதி ஒழிப்பு சாதாரணமானவர்களுக்கு மட்டுமின்றி சாதனையாளர்களுக்கும் அவசியம். தமிழக அரசின் முயற்சிக்கு பாராட்டுகள்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார்


'சில காலத்திற்கு முன் வரை, அனைவரும் தங்கள் பெயரின் பின், ஜாதியை போட்டுக் கொண்டனர்; இப்போது, அப்படியில்லை. எனவே, தலைவர்களின் பெயர்களில் உள்ள ஜாதியை இப்போது அகற்றுவது, மீண்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் தான் இருக்கும்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை.தமிழகத்தின் தடுப்பூசி தேவை, 12 கோடி. இதுவரை, 2 கோடி வந்துள்ளது. இன்னும், 10 கோடி வர வேண்டியுள்ளது. கடந்த மாதம் வழங்கியது போல இந்த மாதமும் கூடுதலாக தந்தால் நன்றாக இருக்கும்.
- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்


'தடுப்பூசியை வைத்து மிகப் பெரிய அரசியலை, தமிழக அரசு செய்து விடும் என பயந்தே, கூடுதல், 'டோஸ்'களை மத்திய அரசு வழங்கி வருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
09-ஆக-202120:32:32 IST Report Abuse
Sivagiri காந்திக்கும் - இந்திரா , ராஜீவ் , சோனியா , ராகுல் , பிரியங்கா இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை - - ஜவாஹர்லால் நேரு-வின் வம்சம் என்றால் இந்திராலால் நேரு , ராஜீவ்லால் நேரு , ராகுல்லால் நேரு , என்றுதானே வர வேண்டும் . . . காந்தியின் பெயர் இவர்களுக்கு எப்படி வந்தது ? ? -
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்ராஜாஜியாவது சமர்த்தா காந்தி குடும்பத்தில் பெண் கொடுத்து சம்பந்தம் செய்து கொண்டார்...
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
09-ஆக-202121:52:49 IST Report Abuse
Suppanசிவகிரி அவர்களே இந்திரா பெரோஸ் காந்(டி)தி என்ற பார்சியை மணந்து கொண்டார். பார்சிக்கள் குஜராத்தி surname உபயோகப் படுத்துவார்கள். ஆனால் உச்சரிப்பு காண்டி. அதை இந்திரா தனக்கு சாதகமாக உபயோகப் படுத்திக் கொண்டார். அதை ராஜீவும் பின்னர் ராகுலும் உபயோகப் படுத்திக் கொண்டார்கள். வாட்றாவைத் திருமணம் செய்து கொண்ட பின்னரும் ப்ரியாங்கா ஊரை ஏமாற்ற காண்டி பெயரை உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார். அதை makkaL மோகன்தாஸ் காந்தியுடன் தொடர்பு படுத்தி தங்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.....
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
09-ஆக-202119:26:49 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் ரிலையன்ஸ் JIO வளர BSNK முடக்கம் / ரிலையன்ஸ் PETROLEUM வளர BPCL முடக்கம் / ரிலையன்ஸ் insurance வளர LIC முடக்கம் / ரிலையன்ஸ் GAS வளர ONGC முடக்கம் / ரிலையன்ஸ் defence வளர HAL முடக்கம் , இப்போ சொல்லுங்கள் யார் இந்தியாவின் உண்மையான பிரதமர் மோடியா இல்லை அம்பானியா...
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
09-ஆக-202121:56:57 IST Report Abuse
Suppanஷண்முகபிரியன் - AMBATTUR,இந்தியா எழுபதுகளிலிருந்தே திருபாய் அம்பானி ஆளும் கட்சியைக் கையில் போட்டுக் கொண்டு தன்னுடைய கம்பெனிகளை வளர்த்தார் என்பது சரித்திரம். அதையே தற்பொழுது முகேஷுபாயும் செய்து கொண்டிருக்கிறார். பிழைக்கத் தெரிந்தவர்கள்....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
09-ஆக-202117:22:06 IST Report Abuse
DVRR நாடு நாசம் அடைந்து விட்டது என்று சொல்லவேண்டும் என்றால் நேரு இந்திரா ராஜீவ் சஞ்சய் காந்தி என்ற பெயர் இருக்கவேண்டும் என்று தெள்ளத்தெளிவாக காண்பிப்பதற்க்காகத்தான் இப்படி பெயர் சூட்டப்படுகின்றது என்று இதனால் அறிவோமாக????
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
09-ஆக-202119:19:29 IST Report Abuse
Dhurveshஆமாம் தானே , இந்த காவிகள் வருவதற்கு முன்னர் இருந்த LIC ISRO BP IOC HAS SAIL AIRPORT எல்லாம் எங்கே , அதை நிர்மாணிக்கும்போது இல்லாத ஒரு கட்சி இன்று வந்து விற்று காசாக்கி காலம் ஒட்டது...
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
10-ஆக-202116:21:00 IST Report Abuse
Suppanஆம். தில்லி, மும்பை விமான நிலையங்கள் may 2, 2006 (அதாவது காங்கிரஸ் ஆட்சியில்) அன்று தனியார் மயமாக்கப் பட்டது. இன்று அவை சர்வதேசத் தரத்தில் உள்ளன. அரசிடம் உள்ள SAIL போன்ற கம்பெனிகளின் பங்குகளை விற்க 2010 ல் திட்டமிடப்பட்டது. இதைப் பற்றிய கொள்கை முடிவு பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டுவிட்டன.IOC, HAL போன்றவைகளின் பங்குகள் பல ஆண்டுகளாக பங்கு மார்க்கெட்டில் உள்ளன. யார் வேண்டுமானாலும் வாங்கலாம் . முரசொலி மட்டும் படித்தால் இந்த விஷயங்கள் புரியாதுதான். விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு கருத்தைப் பதிவிடுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X