20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தாக்கும் 'டெல்டா' வகை தொற்று

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவாகால்கோ: மெக்சிகோ நாட்டில் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 'டெல்டா' வகை தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் மொத்தமுள்ள 12.60 கோடி மக்கள் தொகையில் ஐந்து கோடி பேர் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளனர். 2.70 கோடி பேர் ஒரு டோஸ் போட்டுள்ளனர். அந்நாட்டில் 30 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2.44 லட்சம்
Delta Varient, Youngsters, Warn, Mexicans,

கோவாகால்கோ: மெக்சிகோ நாட்டில் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 'டெல்டா' வகை தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் மொத்தமுள்ள 12.60 கோடி மக்கள் தொகையில் ஐந்து கோடி பேர் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளனர். 2.70 கோடி பேர் ஒரு டோஸ் போட்டுள்ளனர். அந்நாட்டில் 30 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2.44 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. கொரோனா உயிரிழப்பு அதிகமுள்ள நாடுகளில் மெக்சிகோ நான்காவது இடத்தில் உள்ளது. மெக்சிகோவில் 20 வயதுகளில் உள்ள இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு தற்போது ஆளாகி வருகின்றனர்.


latest tamil news


மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று மீளக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிக வீரியம் உடைய 'டெல்டா' வகை தொற்றால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசு தயங்குவதாலும், தனிமனித இடைவெளி, மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்காததாலும், தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
09-ஆக-202111:11:45 IST Report Abuse
தத்வமசி என்னென்னவோ சொல்லி பயமுறுத்திறீங்க...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-ஆக-202110:18:34 IST Report Abuse
S.Baliah Seer ஒரு நோய் இளைஞர்களை எப்படி குறிவைக்கும்? இது இளைஞர்களை பயமுறுத்தி அவர்களை வீட்டிலேயே முடக்கும் சூழ்ச்சியாகும்.
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
09-ஆக-202112:35:14 IST Report Abuse
வந்தியதேவன்எப்படிய்யா... இளைஞர்களை தாக்காம இருக்கும்? பீஸா, பர்க்கர்...னு கொரோனா கிருமிக்கு பிடிச்ச உணவை உண்டால்... அது பரவாதா அய்யா...? சாப்பிடறதுதான் சாப்பிடுறானுங்க... சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், விரலி மஞ்சள், கிராம்பு, ஏலக்காய், சாதிபத்திரி... போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டா.. நோய் நுரையீரலை தாக்காதுய்யா... அவனுங்கதான்.... ஒரு மாசத்துக்கு முன்னாடி வெட்டுன மாட்டுக்கறி, பன்றிக்கறிய பதப்படுத்தி சாப்பிட்டா... இதுதான் நடக்கும்? இந்திய நாட்டு மக்கள் உண்ணும் “மருந்தே உணவு, உணவே மருந்து'...ங்கற புத்தம் புதுசா விளைஞ்ச காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடாம... ஒரு மாசம், ரெண்டு மாசம், மூணு மாசம் விளைஞ்சதை... டப்பா..வுல அடைச்சத தின்னா... இந்த நோய் சீக்கிரமா பரவும்... ஒழுங்கா, எங்க ஊர் கிராமத்தான், விவசாயக் கூலி குடிக்கும் கேழ்வரகு கூழ குடிக்கச் சொல்லு சரியாயிடும்...
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
09-ஆக-202114:30:48 IST Report Abuse
R S BALAசுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், விரலி மஞ்சள், கிராம்பு, ஏலக்காய், சாதிபத்திரி.. போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டா.. நோய் நுரையீரலை தாக்காதுய்யா.. நீங்கள் சொல்வது ஆறுதலாகத்தான் உள்ளது .. ஆனால் நடப்பது என்ன .. எவ்வளவு ஆஜானுபாகுவான உடல் கொண்டவராயினும் .நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர் ஆனாலும் அவரை நோக்கி ஒரு துப்பாக்கி எடுத்து சுட்டால் முன் சொன்ன ஏதும் பயனளிக்குமா ? இந்த வைரஸ் அது போல விஞ்ஞான முறையில் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது .. இயற்கை பேரழிவில் எந்த ஒரு புத்திசாலித்தனமும் இருக்காது மிக குறுகிய காலத்திலேயே அது செயல் இழந்துவிடும் .. ஆனால் இந்த வைரஸ் உருமாறுகிறது வயது பார்த்து அதுவும் ஒரு குறிப்பிட்ட உறுப்பை அழிக்கிறது .. இன்னும் எதிர் காலத்தில் குலகோத்திரம் பார்த்து வந்தாலும் ஆசிரியப்படுவதிற்கில்லை போலும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X