சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேர்ணாம்பட்டில் 2 வீடுகளில் 13 பவுன், ரூ 6 லட்சம் திருட்டு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டில், இரண்டு வீடுகளில் 13 பவுன் நகை, ஆறு லட்சம் ரூபாய் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் சிக்கந்தர், 35. கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவர் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவற்கு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த மாதம் 25ம்

பேர்ணாம்பட்டு: பேர்ணாம்பட்டில், இரண்டு வீடுகளில் 13 பவுன் நகை, ஆறு லட்சம் ரூபாய் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் சிக்கந்தர், 35. கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவர் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவற்கு வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த மாதம் 25ம் தேதி சென்றார். இன்று (ஆக.,9) காலை 8 மணிக்கு வீட்டுக்கு வந்த போது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, 5 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. பேர்ணாம்பட்டு ரஷீதாபாப் பகுதியில், பூட்டியிருந்த பரீதாபானு, 65, என்பவர் வீட்டு கதவை உடைத்து மூன்று பவுன், ஒரு லட்சம் திருட்டு போனது. பேர்ணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X