அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிதிப் பற்றாக்குறையால் கடன் வாங்கினோம்: பழனிசாமி

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
சேலம்: நிதிப் பற்றாக்குறையால் தான் கடன் வாங்கினோம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2011-ல் அ.தி.மு.க பதவியேற்கும்போது நிதிநிலைமை பற்றாக்குறையாக இருந்தது. எனவே வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டிய சூழலில் இருந்தோம். எல்லா மாநிலங்களும் கடன் வாங்கத்தான்
 நிதிப் பற்றாக்குறையால் கடன் வாங்கினோம்: பழனிசாமி

சேலம்: நிதிப் பற்றாக்குறையால் தான் கடன் வாங்கினோம் என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 2011-ல் அ.தி.மு.க பதவியேற்கும்போது நிதிநிலைமை பற்றாக்குறையாக இருந்தது. எனவே வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற கடன் வாங்கி நிறைவேற்ற வேண்டிய சூழலில் இருந்தோம். எல்லா மாநிலங்களும் கடன் வாங்கத்தான் செய்கிறது. மின்உற்பத்தி மற்றும் விநியோகம், போக்குவரத்து கழகத்தை நிர்வகிக்கும் செலவுகள் அதிகமாக இருந்தன. இருந்தபோதும் நாங்கள் மின்கட்டனங்களை உயர்த்தவில்லை. நஷ்டத்தில் அவை இயங்கின.


latest tamil news



இப்போது தி.மு.க., எங்களது ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்குத்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கின்றனர். நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒருசிலவற்றை தவிர பிற திட்டங்களுக்கான எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
10-ஆக-202108:46:31 IST Report Abuse
madhavan rajan திமுக எப்போதும் வாயில வட சுடறவங்க என்பது அண்ணா காலத்திலிருந்தே பிரசித்தம். அவர்களது முதல் பிரசாரமான ரூபாக்கு மூணுபடி அரசி திட்டமே இன்னும் கிடப்பில் இருக்கு. முக குடும்பம் வளர்ச்சி முழுவதும் தமிழகத்தின் நிதி பர்ராக்குறைக்கு ஒரு முக்கிய காரணம். அரசுக்கு வரவேண்டிய வருவாயை ஆட்டையைப் போட்டதில் முக்கிய பங்கு அந்த குடும்பத்துக்கு உண்டு.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
09-ஆக-202121:51:13 IST Report Abuse
bal வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் வாங்கினார்கள்...திமுக கடன் வாங்கி குடும்ப தொழில் தொடங்கும்...எப்படி இதனை குறைந்த காலத்தில் இதனை ஆயிரம் கோடி சொத்து சேர்த்தனர் திமுக குடும்பம்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
09-ஆக-202119:37:38 IST Report Abuse
Narayanan சென்ற மார்ச் இரண்டாயிரத்து இருபது மார்ச் முதல் , வர்த்தகம் , போக்குவரத்து , பெட்ரோல் நிலையங்கள் ,பள்ளிகள் மற்றும் வருவாய் தரக்கூடிய இடங்கள் அனைத்தும் நிறுத்தம் . ஆனால் அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கிது எப்படி ? மேலும் மக்களுக்கு உணவு வழங்க ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக உணவுப்பொருள்கள் , கொரோநா காலத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ உதவி . இதெல்லாம் செய்ய கடன் வாங்காமல் என்ன செய்ய ?
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
09-ஆக-202120:51:40 IST Report Abuse
vadiveluஇலவச உணவு பொருட்கள் வழங்கியது மத்திய அரசு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X