பொது செய்தி

இந்தியா

வேலையிழப்பு நிலையை கண்டறிய பார்லி., நிலைக்குழு கோரிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'நாட்டில் நிலவும் வேலை இழப்பு குறித்து நம்பகமான நிறுவனங்கள் நடத்திய ஆய்வு முடிவுகளை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக தரவுகளுடன்,மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்' என, பார்லிமென்ட்நிலைக்குழு தெரிவித்துள்ளது.வேலை இழப்புகொரோனா பரவல் காரணமாக,கடந்த ஆண்டு மார்ச் முதல் நாடு முழுதும் ஊரடங்கு


புதுடில்லி : 'நாட்டில் நிலவும் வேலை இழப்பு குறித்து நம்பகமான நிறுவனங்கள் நடத்திய ஆய்வு முடிவுகளை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக தரவுகளுடன்,மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்' என, பார்லிமென்ட்நிலைக்குழு தெரிவித்துள்ளது.

வேலை இழப்புகொரோனா பரவல் காரணமாக,கடந்த ஆண்டு மார்ச் முதல் நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான துறைகள் முடங்கின. முன் எப்போதும்இல்லாத அளவு வேலை இழப்பு ஏற்பட்டது.இந்நிலையில்,மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துக்கான பார்லி., நிலைக்குழு 25வது அறிக்கையை, பார்லி.,யில் சமீபத்தில் தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 2019 - 20ம் நிதியாண்டில்,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில்,78.58 லட்சம் சம்பளப் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளன.கொரோனா பெருந்தொற்று காலமான 2020 - 21ம் நிதியாண்டில்,புதிய சம்பளப் பட்டியல் இணைப்பு 77.08 லட்சமாக இருந்துள்ளது.கடந்த 2020 - 21ல் முற்றிலுமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஏப்ரல் மற்றும் மே மாதத்தை தவிர, மற்ற அனைத்து மாதங்களிலும் புதிய சம்பளப் பட்டியல் இணைப்பு நடந்துள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தகவல் தெரிவிக்கிறது.

வைப்பு நிதி :

அதே நேரம், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சம்பளம் பெறும் முறைசார்ந்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேர், சுய வேலைவாய்ப்பு, கூலி வேலைகள் உள்ளிட்ட முறைசாரா தொழில்களில் ஈடுபட துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள தகவல்கள் மற்றும் நம்பகமான நிறுவனங்கள் நடத்தியுள்ள ஆய்வுகளை ஒப்பிட்டு பார்த்து, நம் நாட்டின் வேலை இழப்பு நிலவரத்தின் உண்மை நிலையை மத்திய அரசு கண்டறிந்து,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X