பொது செய்தி

இந்தியா

50.86 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: சுகாதாரத் துறை

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: 'நாடு முழுவதும் 50.86 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களின் கையிருப்பில் 2.33 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஆக., 9) தெரிவித்துள்ளது. கையிருப்பில் 2.33 கோடி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18

புதுடில்லி: 'நாடு முழுவதும் 50.86 கோடி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. அதேபோல், மாநிலங்களின் கையிருப்பில் 2.33 கோடி கோவிட் தடுப்பூசிகள் உள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஆக., 9) தெரிவித்துள்ளது.



latest tamil news




கையிருப்பில் 2.33 கோடி


மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் இதுவரை 52,40,60,890 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. அதில், 50,51,29,252 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்து உள்ளன. மேலும், 2,33,55,890 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். கூடுதலாக 8,39,780 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு உள்ளன.


latest tamil news



நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,11,590 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று காலை 7:00 மணி நிலவரப்படி, மொத்தம் 50,86,64,759 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202108:26:06 IST Report Abuse
Vittal anand rao. இரண்டாம் தடுப்பூசிக்கு அரசியல்வாதி துட்டு வாங்கி டோக்கன் கொடுக்கிறான்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-ஆக-202114:47:04 IST Report Abuse
A.George Alphonse இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. என்று நாம் கரோண வைரஸ் ஸிரோ நிலைக்கு வருகிறதோ அன்றுதான் நமக்கு உலக பெரும் சாதனை.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-ஆக-202113:59:32 IST Report Abuse
A.George Alphonse இது ஒன்றும் பெரிய சாதனை இல்லை.எப்போது கரோண வைரஸ் ஸீரோவுக்கு வருகிறதோ அன்றுதான் நமக்கு மிகப்பெரிய சாதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X