அ.தி.மு.க., கட்சிக்கொடி எரிப்பை கண்டித்து ஆர்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கட்சிக்கொடி எரிப்பை கண்டித்து ஆர்பாட்டம்

Added : ஆக 09, 2021
Share
ஆற்காடு: ஆற்காட்டில், அ.தி.மு.க., கட்சிக்கொடி, கம்பத்தை தீ வைத்து எரித்தவர்களை கைது செய்ய எம்.எல்.ஏ., ரவி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் 19 வது வார்டு அவுசிங் போர்டு பகுதியில் அ.தி.மு.க., கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. நேற்று (ஆக.,8) இரவு 10 மணிக்கு மர்ம நபர்கள், கட்சிக் கொடியை கீழே இறங்கி கிழித்துப் போட்டு கம்பத்திற்கு தீ வைத்து எரித்தனர். தகவல்
அ.தி.மு.க., கட்சிக்கொடி எரிப்பை கண்டித்து ஆர்பாட்டம்

ஆற்காடு: ஆற்காட்டில், அ.தி.மு.க., கட்சிக்கொடி, கம்பத்தை தீ வைத்து எரித்தவர்களை கைது செய்ய எம்.எல்.ஏ., ரவி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் 19 வது வார்டு அவுசிங் போர்டு பகுதியில் அ.தி.மு.க., கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. நேற்று (ஆக.,8) இரவு 10 மணிக்கு மர்ம நபர்கள், கட்சிக் கொடியை கீழே இறங்கி கிழித்துப் போட்டு கம்பத்திற்கு தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்த அரக்கோணம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ரவி தலைமையில் சம்பவம் நடந்த இடத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆர்பாட்டம் நடத்தினர். அதில், கட்சி கம்பத்தை எரித்தவர்களை கைது செய்யும்படி கோஷமிட்டனர். ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X