பொது செய்தி

தமிழ்நாடு

வீடற்றவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க கலெக்டர் உத்தரவு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வேலூர்: வேலூர் கலெக்டர் உத்தரவுப்படி, பழைய பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றோரை, ஆதரவற்றோர் இல்லத்தில் மாநகராட்சி அலுவலர்கள் சேர்த்தனர்.வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அறிவுறுத்தலின் பேரில், இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேற்று இரவு(ஆக.-8) பழைய பேருந்து நிலையத்தில்
வீடற்றவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க கலெக்டர் உத்தரவு

வேலூர்: வேலூர் கலெக்டர் உத்தரவுப்படி, பழைய பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றோரை, ஆதரவற்றோர் இல்லத்தில் மாநகராட்சி அலுவலர்கள் சேர்த்தனர்.

வேலூர் மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் அறிவுறுத்தலின் பேரில், இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேற்று இரவு(ஆக.-8) பழைய பேருந்து நிலையத்தில் ஆதரவற்றவர்கள் 11 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று, இரண்டாம் மண்டலம் சுக்கையா வாத்தியார் தெருவில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். மாநகராட்சி மூலம் அவர்களுக்கு குடிநீர், உணவு மற்றும் படுக்கை மெத்தைகள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தனர். அவர்கள் விரும்பினால் காலையில் வெளியில் சென்றுவிட்டு இரவில் உறங்குவதற்கு ஆதரவற்றோர் இல்லத்திற்கு வரும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X