பொது செய்தி

இந்தியா

2 டோஸ் தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை: மும்பையில் உள்ள மின்சார ரயிலில் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.கோவிட் 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய
Mumbai, Local Trains, Fully Vaccinated, People, மும்பை, மின்சார ரயில், தடுப்பூசி, அனுமதி

மும்பை: மும்பையில் உள்ள மின்சார ரயிலில் 2 டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாக மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கோவிட் 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:


latest tamil news



மும்பையில் இதுவரை 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, முதல் கட்டமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற ஆக.,15ம் தேதி முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம். தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது.
பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத சீசன் பாஸ் பெறலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், மற்றும் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த சீசன் பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய கியூஆர் கோடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
09-ஆக-202117:51:31 IST Report Abuse
Girija மருந்தே ஸ்டாக் இல்லையாம் இதில் ரெண்டு டோஸ் வேற போட்டிருக்கணுமாம் ? தமிழருக்கு எதிராக காவியின் செயல் இதை திரவிட இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது .
Rate this:
10-ஆக-202108:17:14 IST Report Abuse
Vittal anand rao.திராவிட இயKகம் தமிழருக்கு மட்டுமா ? அறிவுக்கொழுந்தே...
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-ஆக-202114:45:11 IST Report Abuse
Loganathan Kuttuva இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களுக்கு பிற நகரங்களில் உள்ள மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் பிற பாசஞ்சர் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கலாம்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
09-ஆக-202114:21:40 IST Report Abuse
 N.Purushothaman இரண்டு டோஸ் போட்டு கொண்டாலும் முகக்கவசத்தை கைவிடக்கூடாது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X