பொது செய்தி

தமிழ்நாடு

பட்டியலில் இல்லாத கோவில்களும் அடைப்பு: அதிகாரிகள் எச்சரிக்கையால் பக்தர்கள் ஏமாற்றம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஈரோடு: தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறாத கோவில்களும் அடைக்கப்பட்டதால், ஈரோட்டில் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆடி அமாவாசையான நேற்று காவிரிக்கரைகளில் நீராட, மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற, பண்ணாரி, பாரியூர், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வர், நட்டாற்றீஸ்வரர் கோவில், ஈரோடு பெரியமாரியம்மன் உள்பட, 23 கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு,

ஈரோடு: தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறாத கோவில்களும் அடைக்கப்பட்டதால், ஈரோட்டில் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆடி அமாவாசையான நேற்று காவிரிக்கரைகளில் நீராட, மாவட்டத்தில் உள்ள பிரசித்த பெற்ற, பண்ணாரி, பாரியூர், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வர், நட்டாற்றீஸ்வரர் கோவில், ஈரோடு பெரியமாரியம்மன் உள்பட, 23 கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, பட்டியலும் வெளியிடப்பட்டது. ஆனால், பட்டியலில் இடம் பெறாத, ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், மாநகராட்சி விநாயகர் கோவில், கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில், கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரியமாரியம்மன் கோவில்களும் நேற்று அடைக்கப்பட்டன. இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வாசலில் விளக்கு மற்றும் சூடமேற்றி வழிபட்டு சென்றனர். இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறும்போது, 'மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில் இல்லாத கோவில் என்றாலும், கூட்டம் அதிகம் வரும் கோவிலை திறக்கக் கூடாதென, மாநகராட்சி அதிகாரிகள், நேற்று முன்தினமே எச்சரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் கோவில்கள் திறக்கப்படவில்லை' என்றனர்.


* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டாலும், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


* கோபி, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில் திறக்கப்படாத நிலையில், கோவில் வாசலில் நின்று பக்தர்கள் கும்பிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X