பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு பள்ளிகளில் ஆக., தேர்வு இன்று தொடக்கம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட பள்ளிகளில், ஆகஸ்ட் மாத தேர்வு இன்று 9ல் துவங்கி நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன் லைனிலேயே வகுப்பு நடக்கிறது. இந்நிலையில் ஆக., மாதத்துக்கான தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு தேர்வு அட்டவனை வழங்கப்பட்டுள்ளது. தினமும் பிளஸ் 2 மற்றும்

ஈரோடு: ஈரோடு மாவட்ட பள்ளிகளில், ஆகஸ்ட் மாத தேர்வு இன்று 9ல் துவங்கி நடக்கிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன் லைனிலேயே வகுப்பு நடக்கிறது. இந்நிலையில் ஆக., மாதத்துக்கான தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு தேர்வு அட்டவனை வழங்கப்பட்டுள்ளது. தினமும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.க்கு காலை, 10:00 முதல், 12:00 மணி வரை; ஒன்பதாவது மற்றும் பிளஸ் 1க்கு, மதியம், 2:00 மணி முதல், 4:00 மணி வரை தேர்வு நடக்கிறது. தினமும் காலை, 10:00 மணிக்கு முன் முதன்மை கல்வி அலுவலர், வினாத்தாள்களை பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பி வைப்பார். பள்ளி தலைமை ஆசிரியர், மாணவ-மாணவிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைப்பார். வாட்ஸ் ஆப் அல்லது வெள்ளை பேப்பரில் எழுதி, தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி.க்கு தமிழ் தேர்வு; ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு ஆங்கில பாட தேர்வும் நடக்கிறது. நாளை பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சிக்கு ஆங்கில தேர்வு; ஒன்பது, பிளஸ் 1க்கு தமிழ் தேர்வு நடக்கிறது.11ம் தேதி பிளஸ் 2க்கு வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், பி.எம்.இ., பி.இ.இ.க்கு கருத்தியலும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு கணித பாட தேர்வும் நடக்கிறது. ஒன்பதாம் வகுப்புக்கு சமூக அறிவியல், பிளஸ் 1க்கு இயற்பியல், வணிகவியல் தேர்வு நடக்கிறது. 12ம் தேதி பிளஸ் 2க்கு இயற்பியல், வணிகவியல், எஸ்.எஸ்.எல்.சி.அறிவியல் தேர்வு நடக்கிறது. மாலையில் ஒன்பதாம் வகுப்பு கணிதம், பிளஸ் 1க்கு வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், பி.எம்.இ., மற்றும் பி.இ.இ. கருத்தியல் நடக்கிறது. 13ம் தேதி பிளஸ் 2க்கு உயிரியல், தாவரவியல், வணிக கணிதம், புள்ளியியல், வரலாறும், எஸ்.எஸ்.எல்.சி.க்கு சமூக அறிவியல், மாலையில் ஒன்பதாம் வகுப்புக்கு அறிவியல், பிளஸ் 1க்கு கணிதம், விலங்கியல், பொருளியல், உயிர் வேதியியல், செவிலியல்-மனையியல் பாட தேர்வு நடக்கிறது. 16ம் தேதி பிளஸ் 2க்கு கணிதம், விலங்கியல், பொருளியல், ஓஎஸ்எஸ். வேளாண்மைக்கு கருத்தியல், உயிர் வேதியியல், செவிலியல், மனையியல், மைக்ரோ பயாலஜி தேர்வு நடக்கிறது. பிளஸ் 1க்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், கணினி தொழில் நுட்பம், சிறப்பு தமிழ் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி பிளஸ் 2க்கு கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், கணினி தொழில் நுட்பம், சிறப்பு தமிழ் தேர்வும், மாலையில் பிளஸ் 1க்கு உயிரியல், தாவரவியல். வணிக கணிதம், புள்ளியியல், வரலாறு தேர்வு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X