சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை புகாரால் மகன் உடல் தோண்டியெடுப்பு; அந்தியூர் அருகே பரபரப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அருகே, தந்தை புகாரால், மகன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூராய்வு நடந்தது. அந்தியூர் அருகே, எண்ணமங்கலம், ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் மகன் சாமிநாதன், 22; ஆப்பக்கூடல் அருகே கள்ளியூரில், பழனிச்சாமி செங்கல் சூளையில், மனைவி, மகனுடன் தங்கி, மூர்த்தி ஐந்து மாதமாக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம், ?1ம் தேதி, மனைவிக்கு உடல்நிலை

அந்தியூர்: அந்தியூர் அருகே, தந்தை புகாரால், மகன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூராய்வு நடந்தது. அந்தியூர் அருகே, எண்ணமங்கலம், ஓங்காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் மகன் சாமிநாதன், 22; ஆப்பக்கூடல் அருகே கள்ளியூரில், பழனிச்சாமி செங்கல் சூளையில், மனைவி, மகனுடன் தங்கி, மூர்த்தி ஐந்து மாதமாக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம், ?1ம் தேதி, மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சாமிநாதனை செங்கல் அறுக்க மூர்த்தி அனுப்பினார். சூளையில் அறுத்த செங்கற்களை வண்டியில் வைத்து, சாமிநாதன் தள்ளிச் சென்றார். அப்போது பக்கத்து 'செட்'டில் தங்கி வேலை செய்யும் குமார் என்பவரின் மடக்கு கட்டிலில் வண்டி மோதியதால், அவர் திட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் தங்கள் 'செட்'டில், மூர்த்தி குடும்பத்தினர் அன்றிரவு உறங்கினர். மறுநாள் காலை எழுந்தபோது, சாமிநாதன் 'செட்'டின் அருகில் தூக்கில் சடலமாக தொங்கினார். எண்ணமங்கலம் சுடுகாட்டில் மகன் உடலை அடக்கம் செய்தார். இந்நிலையில் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, ஆப்பக்கூடல் போலீசில், நேற்று முன்தினம் மூர்த்தி புகாரளித்தார். இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ குழுவினர், சாமிநாதன் உடலை நேற்று தோண்டி எடுத்து, உடற்கூராய்வு செய்தனர். கோவைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X