பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
தர்மபுரி: கொரோனா தொற்றால் ஆடி அமாவாசைக்கு, பிரதான கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோவில் பணியாளர்கள் மூலம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. நேற்று, மொடக்கோரி சிவசக்தி பீட கோவிலில், சிவன், சக்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதேபோன்று தர்மபுரி கோட்டை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் உடனாகிய கல்யாண

தர்மபுரி: கொரோனா தொற்றால் ஆடி அமாவாசைக்கு, பிரதான கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோவில் பணியாளர்கள் மூலம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. நேற்று, மொடக்கோரி சிவசக்தி பீட கோவிலில், சிவன், சக்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதேபோன்று தர்மபுரி கோட்டை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் உடனாகிய கல்யாண காமாட்சி, எஸ்.வி., ரோடு ஆஞ்சநேயகர், முத்தம்பட்டி, தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் உட்பட, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

* கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெரு முத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு சில பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு வந்திருந்தனர்.


* ஓசூர், அண்ணாமலை நகர் முத்து மாரியம்மன் கோவிலில், கூழ் ஊற்றுதல், மாவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், பக்தர்கள் கரங்களால் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அம்மன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X