பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6,000 கன அடி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடா ஹாசன், மற்றும் கேரளா மாநிலம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 9,187 கன அடி தண்ணீர்

ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடா ஹாசன், மற்றும் கேரளா மாநிலம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், கர்நாடக அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் பாதுகாப்பு கருதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 9,187 கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, இரு அணைகளில் இருந்து, 21 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மாலை, 6:00, மணிக்கு வினாடிக்கு, 6,000 கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X