பொது செய்தி

தமிழ்நாடு

'மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு வறண்டு போகும்'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''மேகதாதுவில் அணை கட்டினால், தமிழ்நாடு வறண்டு போகும்,'' என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர், எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவை துவக்கி ?வைத்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடகா

கிருஷ்ணகிரி: ''மேகதாதுவில் அணை கட்டினால், தமிழ்நாடு வறண்டு போகும்,'' என, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர், எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவை துவக்கி ?வைத்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடகா மாநில முதல்வர் அடம்பிடித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணசாகர் மற்றும் கபினி அணைக்கு கீழே அணைகள் எதுவும் கிடையாது. கட்டுப்பாடற்ற நீர்பிடிப்பு பகுதிகளான அங்கிருந்துதான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருகிறது. கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டினால், தமிழ்நாடு வறண்டு போகும். இந்நிலையில், தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை தஞ்சாவூரில், உண்ணாவிரதம் மேற்கொண்டது வேடிக்கையாக உள்ளது. அவர், பிரதமர் அலுவலகம் முன், கர்நாடகா முதலமைச்சர் அடாவடியாக பேசியதை கண்டித்து, தமிழக உரிமைகளை காக்க, கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தால், அது பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X