பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் அலுவலகங்களில் இன்று தங்கப்பத்திர விற்பனை துவக்கம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் இன்று முதல் வரும், 13 வரை, தங்கபத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கிராம் முதல், 4,000 கிராம் வரை வாங்கலாம். ஒரு கிராம், 24 காரட் தங்கத்தின் விலை, 4,790 ரூபாய். முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள். இதன் இறுதி தேதியில்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட அஞ்சல் அலுவலகங்களில் இன்று முதல் வரும், 13 வரை, தங்கபத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு கிராம் முதல், 4,000 கிராம் வரை வாங்கலாம். ஒரு கிராம், 24 காரட் தங்கத்தின் விலை, 4,790 ரூபாய். முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகள். இதன் இறுதி தேதியில் அன்றைய தேதியின் மதிப்புக்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகும் தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக, 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். பணம் செலுத்தும் நபர்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர ஆதார், பான் எண், வங்கிக்கணக்கு அவசியம். தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும்போது, வங்கிகளில் கடன் பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X