பொது செய்தி

தமிழ்நாடு

அத்துமீற வேண்டாம்: அமைச்சர் எச்சரிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருச்சி: ''கட் - அவுட், பேனர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றது தி.மு.க., என்பதை கட்சியினர் மறந்து விடக்கூடாது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கட்- அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என, நீதிமன்றத்துக்கு சென்றதே தி.மு.க., தான் என்பதை, கட்சியினர் மறந்து விடக்கூடாது. போஸ்டர் கலாசாரம் வேண்டாம் என்பது தான் தி.மு.க.,வின்

திருச்சி: ''கட் - அவுட், பேனர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றது தி.மு.க., என்பதை கட்சியினர் மறந்து விடக்கூடாது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: கட்- அவுட், பேனர்கள் வைக்கக் கூடாது என, நீதிமன்றத்துக்கு சென்றதே தி.மு.க., தான் என்பதை, கட்சியினர் மறந்து விடக்கூடாது. போஸ்டர் கலாசாரம் வேண்டாம் என்பது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. கட்சியினர் அதை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். ஆளுங்கட்சி என்பதால் விதிமுறைகளை பின்பற்றக்கூடாது என்று இருக்கக் கூடாது. 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் தி.மு.க.,வின் நிலைப்பாடு. அதற்கான போராட்டங்கள் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார்.

செயலில் காட்டுவாரா? திருச்சி மொரைஸ் சிட்டியில் இன்று நடக்கும் கோவில் விழாவில் பங்கேற்க வரும் அமைச்சர் மகேஷை வரவேற்று, 30க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, மொரைஸ் சிட்டி குடியிருப்பு வாசிகள் என்ற பெயரில், அங்குள்ள தி.மு.க.,வினர் சிலரே வைத்துள்ளனர். 'இப்படி பேனர்கள் வைத்தால், அங்கு வரமாட்டேன்' என அமைச்சர் உறுதியாக கூறினால், பேனர் கலாசாரத்தை தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X