பொது செய்தி

தமிழ்நாடு

32 பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்; சர்வதேச போட்டிக்கு செல்ல பணமின்றி தவிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ஓசூர்: பல்வேறு போட்டிகளில், 32 பதக்கங்களை வென்ற கெலமங்கலம் மாற்றுத்திறனாளி வீரர், சர்வதேச போட்டிக்கு செல்ல பணமின்றி தவிக்கிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 23; பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், 134 செ.மீ., உயரம் கொண்டவர். சரியாக காது கேட்காது; குண்டு, வட்டு எறிதல் போட்டிகளில், 2008 முதல், தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி

ஓசூர்: பல்வேறு போட்டிகளில், 32 பதக்கங்களை வென்ற கெலமங்கலம் மாற்றுத்திறனாளி வீரர், சர்வதேச போட்டிக்கு செல்ல பணமின்றி தவிக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 23; பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், 134 செ.மீ., உயரம் கொண்டவர். சரியாக காது கேட்காது; குண்டு, வட்டு எறிதல் போட்டிகளில், 2008 முதல், தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒரு தங்கம், 11 வெள்ளி, 20 வெண்கலம் என, 32 பதக்கம் பெற்றுள்ளார். கடந்த, 2013ல், அமெரிக்காவில் நடந்த உலக குள்ள மனிதர் சர்வதேச போட்டியில், வட்டு, குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இரு சகோதரிகள் திருமணமாகி சென்று விட்டனர். விபத்தில் காயமடைந்த சகோதரி நிர்மலா, 38, உடல் நலம் குன்றிய தந்தையுடன் வசிக்கிறார். ஒவ்வொரு முறையும் கடன் பெற்று, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார். அடுத்த மாதம் போலந்து நாட்டில், மாற்றுத்திறனாளி சர்வதேச போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க நிதியின்றி முடங்கியுள்ளார். இவருக்கு உதவ விரும்புவோர், 89717 37419 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், தமிழக அரசு ஏதாவது பணி வழங்க வேண்டுமென்பதும், இவரது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X