பொது செய்தி

தமிழ்நாடு

மனிதனின் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள கற்கருவிகள் ஆய்வு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: மனிதனின் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள, கற்கருவிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.சர்மாவின் பாரம்பரிய கல்வி மைய அமைப்பாளரும், தொல்லியல் ஆய்வாளருமான சாந்திபப்பு மற்றும் குமார், அகிலேஷ் குழுவினர், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள புதிய கற்கால கற்கருவிகளை ஆய்வு செய்தனர். அதன் நீளம், அகலம், கனம், எடை, விளிம்புகளின் கோணம்

கிருஷ்ணகிரி: மனிதனின் வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள, கற்கருவிகளை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சர்மாவின் பாரம்பரிய கல்வி மைய அமைப்பாளரும், தொல்லியல் ஆய்வாளருமான சாந்திபப்பு மற்றும் குமார், அகிலேஷ் குழுவினர், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் உள்ள புதிய கற்கால கற்கருவிகளை ஆய்வு செய்தனர். அதன் நீளம், அகலம், கனம், எடை, விளிம்புகளின் கோணம் ஆகியவற்றை துல்லியமாக அளவீடு செய்தனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: உணவை தேடி, மனிதன் காட்டுக்கு சென்று வேட்டையாடினான். ஆனால், புதிய கற்காலத்தில் மனிதன் இருக்கும் இடத்திலேயே, உணவை உருவாக்க கற்றுக் கொண்டான். அதில் உருவானதே விவசாயம். அதற்கு தேவையான கற்கருவிகளையும் அவனே உருவாக்கினான். இக்கருவிகள், ஏர் ஓட்டவும், கோடாரியாகவும், மரம் வெட்டவும் ஆயுதமாக பயன்படுத்தினான். இக்கருவிகள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இக் கருவிகளை கொண்டு மனிதனுடைய வாழ்வியல் முறைகளை அறிய, பல்வேறு மாநிலங்களில் வைத்துள்ள கற்கருவிகளை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இக்கருவிகள் கிடைத்த இடங்களுக்கே நேரில் சென்று, இக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X