தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் புது கட்டுப்பாடு: மாலை 6:00 வரை மட்டும் கடைகளுக்கு அனுமதி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சேலம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில், இன்று முதல் புது கட்டுப்பாடு அமலாகிறது.இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடு ஆக.,9 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. மாநகர பகுதியில், அனைத்து மால், ஜவுளி, நகை கடை, வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட், மாலை, 6:00 மணி வரை மட்டும் செயல்பட

சேலம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில், இன்று முதல் புது கட்டுப்பாடு அமலாகிறது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடு ஆக.,9 (இன்று) முதல் அமலுக்கு வருகிறது. மாநகர பகுதியில், அனைத்து மால், ஜவுளி, நகை கடை, வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட், மாலை, 6:00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. குளிர்சாதன வசதி பயன்படுத்த கூடாது. செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலை, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி சாலை, பால் மார்க்கெட், லீ - பஜார், வீரபாண்டியார் நகர் பகுதி கடைகள் அனைத்தும், மாலை, 6:00 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். அதே கட்டுப்பாடு, வ.உ.சி., மார்க்கெட், சின்னக்கடை வீதி பூ, பழம் காய்கறி கடைகளுக்கும் பொருந்தும். ஞாயிறில் அனைத்து கடைகளும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. ஏற்காடு செல்ல, சனி, ஞாயிறு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாளில் செல்ல, இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அவசியம். கொங்கணாபுரம், வீரகனூர் வாரச்சந்தை, வரும், 23 வரை செயல்பட தடை. அதே தடை, மேட்டூர் அணை பூங்காவுக்கும் உண்டு. இறைச்சி, மீன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, திறந்த வெளியில் தனித்தனி கடையாக செயல்படுவதை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X