கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும்
அர்ச்சகர்கள், நியமனம்

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் பி.எஸ்.ஆர் முத்துக்குமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வள்ளியப்பன், ஆகம விதிகளைப் பின்பற்றி தான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகமவிதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது எனவும் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதாசுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், ஆக.,25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Chennai,கனடா
10-ஆக-202101:58:07 IST Report Abuse
Siva அர்ச்சகர்களுக்கான சான்றிதழும் ஆகம விதிகழும் ஓரே மாதிரியாக இருக்க்கவேண்டும் .ஒரு உரையில் இரு கத்தி தேவையில்லை . எந்த ஹிந்து சமூகத்தினர் வேண்டுமானாலும் அர்ச்சகராக வர வாய்ப்பு இருக்கவேண்டும். அணைத்து நாடுகளுக்கும் உணர்த்தும் வகையில் . இந்துக்கள் அனைவருக்கும் எந்த வேலைக்கும் உரிமையிர்க்கு என்போம். அர்ச்சகர் என்பது தொழில் அல்ல அதற்க்கு பத்தியும் தேவை .
Rate this:
Cancel
10-ஆக-202100:28:24 IST Report Abuse
Vittal anand rao. ஒரு விஷயம் கவனிக்கவும். இந்த. பிராமண எதிர்ப்பு கோவில் அர்ச்சிக்கர் விஷயம் எல்லாம் கைத்தடிகள் தான் பேசுகிறார்கள். சிறீரங்கம் மற்றும மஇலை , திருவல்லிக்கேணி கோவில் முன் மண்டபங்களுக்கு விசிட் அடித்து8 விட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டார். மனைவி பூர்வாசிரம திருப்பதி கல்யாண கட்டடம் சென்று வந்தார்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
10-ஆக-202100:20:12 IST Report Abuse
Vena Suna ப்ராம்மணனை ஒழிக்க நினைப்பவர்கள் நன்றி கெட்டவர்கள்.வரலாற்றை படித்தால் தெரியும். நமது மதமும் மொழியும் தர்மமும் அவனால் மட்டும் தான் நன்கு காக்கப்பட்டது.
Rate this:
Venkatakrishnan - Mumbai,இந்தியா
10-ஆக-202119:48:36 IST Report Abuse
Venkatakrishnanம்ம்ம்ம் அப்புறோம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X