அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெள்ளை அறிக்கையை கிண்டலடித்து மீம் வெளியிட்ட அதிமுக

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
சென்னை: இன்று (ஆக.,9) வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அதிமுக கிண்டலடித்து மீம் வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் கடன், வருமானம், வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்களுடன் வெள்ளை அறிக்கையை இன்று (ஆக.,9) வெளியிடுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, இன்று வெளியான
WhitePaper, ADMK, Meme, அதிமுக, வெள்ளைஅறிக்கை, மீம்

சென்னை: இன்று (ஆக.,9) வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அதிமுக கிண்டலடித்து மீம் வீடியோவை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் கடன், வருமானம், வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்களுடன் வெள்ளை அறிக்கையை இன்று (ஆக.,9) வெளியிடுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, இன்று வெளியான வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி எனவும், 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.


latest tamil news


இந்நிலையில், இந்த வெள்ளை அறிக்கையை கிண்டல் அடித்து அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மீம் ஒன்று பகிரப்பட்டிருக்கிறது. பழைய தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றில் எதிரே நடந்து செல்லும் ஒருவரை வழிமறித்து தனது சட்டைப்பையில் இருந்த வெற்றுக் காகிதத்தை எடுத்து அவரிடம் கொடுக்கும் இயக்குனர் சுந்தர்ராஜன், “அது ஒன்னுமில்ல கீழ போட்டுரு” என்கிறார். நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஒன்றுமில்லை என்பதுபோல் மறைமுகமாக அதிமுக கிண்டலடித்துள்ளது.


மேலும், நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திட்டமிடுவதாகவும் அந்த டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அந்த பதிவு:

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
b. venugopal - tiruchi,இந்தியா
13-ஆக-202111:33:22 IST Report Abuse
b. venugopal அவரவர் வீட்டின் வெள்ளைஅறிக்கை தர முடியுமா
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
13-ஆக-202109:04:45 IST Report Abuse
J. G. Muthuraj மஞ்சள்காமாலை, வெள்ளை எழுத்து பிரச்சனைகள் இருந்தால் எப்படி அறிக்கையை......
Rate this:
Cancel
ravi - coimbatore,இந்தியா
11-ஆக-202112:21:10 IST Report Abuse
ravi ADMK அஸ்தமனக போகுது என்பது நன்றாக தெரிகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X