பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை: மத்திய அரசு விளக்கம்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.பெகாசஸ் உளவு மென்பொருளானது இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனம் உருவாக்கியதாகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாகவும், குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இதனை
Pegasus, No Transaction, Defence Ministry, Parliament, பெகாசஸ், வர்த்தகம், இல்லை, பாதுகாப்புத்துறை, விளக்கம்

புதுடில்லி: பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருளானது இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனம் உருவாக்கியதாகும். இந்த மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாகவும், குற்றவாளிகளையும், பயங்கரவாதிகளையும் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே இதனை விற்பதாகவும் என்.எஸ்.ஓ., நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த உளவு மென்பொருளைக் கொண்டு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பலரை உளவு பார்த்ததாக செய்திகள் வெளியாகின.


latest tamil news


இந்தியாவில் காங்., எம்.பி., ராகுல் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பார்லி.,யின் இரு அவைகளும் 15 நாட்களாக முடங்கின. இந்நிலையில், பெகாசஸ் தொடர்பாக ராஜ்யசபாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., சிவதாசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், ‛பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை,' என எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-202110:54:14 IST Report Abuse
அப்புசாமி எந்த அரசும் நேரடியா வாங்காது. நாட்டின் உளவு பார்க்கும் நிறுவனங்கள் மூலம் வாங்கும். நமது RAW, C.B.I நிறுவனங்கள் வாங்குனாங்களான்னு கேக்கலாம். ஆனா, அதெல்லாம் தேசபாதுகாப்பு ரகசியம்னு ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
09-ஆக-202122:23:52 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் அரசிடமிருந்து விளக்கம் இல்லை என்று பாமரன் என்னும் டீம்கா அடிமை புலம்பியது இப்பொழுது பொய் சொல்வதாக குற்றச்சாட்டு வரும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஆக-202120:15:27 IST Report Abuse
Kasimani Baskaran டூல்கிட் மூலம் பிரச்சினை செய்வது யார் என்று தெரியாதா என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X