வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
லண்டன்: உலகம் முழுவதும் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகத்தை தட்ப வெப்பத்தை மாற்றி மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை அடுத்து ஐநா., முன்னதாக இதுகுறித்து தகவல் வெளியிட்டது. காட்டுத்தீ பரவுதல், எரிமலை வெடித்தல், புயல், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்வதும், இது பல சிறிய
Global Warming, Climate Change, India, காலநிலை மாற்றம்

லண்டன்: உலகம் முழுவதும் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகத்தை தட்ப வெப்பத்தை மாற்றி மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை அடுத்து ஐநா., முன்னதாக இதுகுறித்து தகவல் வெளியிட்டது. காட்டுத்தீ பரவுதல், எரிமலை வெடித்தல், புயல், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்வதும், இது பல சிறிய தீவுகளுக்கு ஆபத்தாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் உலக தட்பவெட்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அளவு உயரும் என முன்னதாக ஐநா., பருவநிலை மாற்ற அமைப்பு தனது ஆறாவது கணிப்பு அறிக்கையில் தகவல் அளித்திருந்தது. பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தம் தட்பவெப்பத்தை சமன் செய்யும் நோக்கில் 2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.


latest tamil news


பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் வளர்ந்துவரும் இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளது தொழிற்சாலைகளில் கார்பன்-டை-ஆக்சைடு புகையை கட்டுப்படுத்தினாலே ஒழிய தட்ப வெப்பத்தை குறைப்பது மிகவும் கடினம் என்பது தீர்மானம் ஆகியது. கடந்த 1750-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை உலக அளவில் 2500 ஜிடி கரியமில வாயு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 40 பில்லியன் டன் கரியமில வாயு உலக நாடுகளால் வெளியிடப்படுகிறது.


latest tamil news


அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் நிதி தட்ப வெட்ப மாறுதலை தடுக்க ஒதுக்குகின்றன. இந்தியா, சீனா, துருக்கி, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் புதிய நிலக்கரியில் இயங்கும் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றன. நிலக்கரி மூலம் ஆற்றல் உருவாக்கப்பட்டு புகைவெளியிட்டால் அது தட்பவெப்பத்தை மாசுபடுத்தாது என்று இந்தியா உறுதி அளித்திருந்தது. ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் இதுகுறித்து கூறுகையில் நிலக்கரியில் இந்தியா முதலீடு செய்திருப்பது வாய்ப்பை தவறவிட்டதற்கு சமம்.

இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்கவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கும் அதே சமயத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதும் அவசியம். இதற்காக இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகள் ஆவண செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
09-ஆக-202122:22:05 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் ஒடனே உலகமகா அறிவாளிகள் மோடியை இடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க அவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் என்றுதான் சொல்லியிருக்காங்க தெற்கு மற்றும் தென்கிழக்கு நாடுகள் அதிக அளவு நிலக்கரி உபயோகிக்கின்றன
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
09-ஆக-202122:09:34 IST Report Abuse
கதிரழகன், SSLC வெள்ளைக்காரன் நிலக்கரி கச்சா எரிவாயு எல்லாத்தையும் எரிச்சு பேக்டரி மில்லு கட்டி முன்னேறிட்டான். நாமளும் அவன் மாதிரி முன்னேற கூடாதுன்னு இப்படி நெருக்கடி கொடுக்கறான். மேல்நாடு மாதிரி இங்க வாழ்க்கை தரம் வேணும் எங்களுக்கு. இப்படித்தான் செய்வம். இல்லாட்டி கொள்ளை அடிச்சு சுரண்டிகிட்டு போன காசை திருப்பி கொடு.
Rate this:
Cancel
09-ஆக-202119:43:09 IST Report Abuse
அப்புசாமி ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிட்டோமே... இன்னும் என்ன வேணும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X