வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு| Dinamalar

வாய்ப்பை தவறவிட்டுவிட்டது இந்தியா; பிரிட்டன் பருவநிலை அமைப்பு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (7)
Share
லண்டன்: உலகம் முழுவதும் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகத்தை தட்ப வெப்பத்தை மாற்றி மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை அடுத்து ஐநா., முன்னதாக இதுகுறித்து தகவல் வெளியிட்டது. காட்டுத்தீ பரவுதல், எரிமலை வெடித்தல், புயல், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்வதும், இது பல சிறிய
Global Warming, Climate Change, India, காலநிலை மாற்றம்

லண்டன்: உலகம் முழுவதும் தற்போது பருவநிலை மாற்றம் ஏற்பட்டு உலகத்தை தட்ப வெப்பத்தை மாற்றி மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை அடுத்து ஐநா., முன்னதாக இதுகுறித்து தகவல் வெளியிட்டது. காட்டுத்தீ பரவுதல், எரிமலை வெடித்தல், புயல், கடலில் அமிலத்தன்மை அதிகரித்தல் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் காரணமாக துருவப் பகுதிகளில் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்வதும், இது பல சிறிய தீவுகளுக்கு ஆபத்தாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை குறைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வி எழுந்தது. அடுத்த 20 ஆண்டுகளில் உலக தட்பவெட்பம் 1.5 டிகிரி செல்சியஸ் அளவு உயரும் என முன்னதாக ஐநா., பருவநிலை மாற்ற அமைப்பு தனது ஆறாவது கணிப்பு அறிக்கையில் தகவல் அளித்திருந்தது. பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தம் தட்பவெப்பத்தை சமன் செய்யும் நோக்கில் 2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.


latest tamil news


பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் வளர்ந்துவரும் இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளது தொழிற்சாலைகளில் கார்பன்-டை-ஆக்சைடு புகையை கட்டுப்படுத்தினாலே ஒழிய தட்ப வெப்பத்தை குறைப்பது மிகவும் கடினம் என்பது தீர்மானம் ஆகியது. கடந்த 1750-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரை உலக அளவில் 2500 ஜிடி கரியமில வாயு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 40 பில்லியன் டன் கரியமில வாயு உலக நாடுகளால் வெளியிடப்படுகிறது.


latest tamil news


அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் நிதி தட்ப வெட்ப மாறுதலை தடுக்க ஒதுக்குகின்றன. இந்தியா, சீனா, துருக்கி, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் புதிய நிலக்கரியில் இயங்கும் தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றன. நிலக்கரி மூலம் ஆற்றல் உருவாக்கப்பட்டு புகைவெளியிட்டால் அது தட்பவெப்பத்தை மாசுபடுத்தாது என்று இந்தியா உறுதி அளித்திருந்தது. ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த ஓவர்சீஸ் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் இதுகுறித்து கூறுகையில் நிலக்கரியில் இந்தியா முதலீடு செய்திருப்பது வாய்ப்பை தவறவிட்டதற்கு சமம்.

இதற்கு மாற்று வழி கண்டுபிடிக்கவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கும் அதே சமயத்தில் சுத்தமான காற்றை சுவாசிப்பதும் அவசியம். இதற்காக இந்தியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகள் ஆவண செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X