பொது செய்தி

இந்தியா

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களுக்கு பாராட்டு விழா

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட
நாடு திரும்பிய, ஒலிம்பிக் வீரர்கள் ,பாராட்டு விழா

புதுடில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் இன்று நாடு திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாராட்டு விழா நடைபெற்றது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் மற்றும், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில், தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

#WATCH | #Olympics Gold medalist, javelin thrower #NeerajChopra received by a huge crowd of people at Delhi Airport. pic.twitter.com/PEhVCoNt60

— ANI (@ANI) August 9, 2021latest tamil newsஅவர்களுக்கு டில்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பதக்கம் வென்ற அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர், வீராங்கனைகளை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர், ரசிகர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.


பாராட்டு விழாபதக்கம் வென்ற வீரர்கள், வரவேற்பைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்கள் பங்கேற்று தங்களுடைய ஒலிம்பிக்களத்தில் தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்தும் வெற்றி தருணங்களையும், .சுவாராஸ்யமாக விழாவில் பகிர்ந்தனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
09-ஆக-202119:40:22 IST Report Abuse
mohankumar ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . 2014 க்கு முன்னர் ஒலிம்பிக் போட்டிக்கு அரசியல் கட்சிகல் போட்டி போட்டு கொண்டு தங்களுக்கு வேண்டிய திறமை இல்லாதவர்களுக்கும் இடம் பிடித்து கொடுத்து வெளி நாட்டை சுற்றி பார்க்க அனுப்பு வார்கள் . இவர்களின் கூட பலர் மருத்துவர்களை ,coach என்ற பெயரில் குடும்பத்தோடு வெளி நாட்டை சுற்றி வந்த வரலாறும் உண்டு ஆனால் . 2014 க்கு பின்னர் எல்லாம் மாரி விட்டது . திறமை உள்ளவர்கள் மாட்டு தான் அனுமதி . குறைந்த ஆட்களாக இருந்தாலும் பரவாயில்லை . என்று பல திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்ததால் தான் நாம் ஒலிம்பிக் போட்டியில் சிறிது சிறிதாக சாதிக்க ஆரம்பிக்கிறோம் .
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
09-ஆக-202119:13:54 IST Report Abuse
கதிரழகன், SSLC நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X