சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மிகப்பெரிய ராக்கெட்அமெரிக்காவின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை கட்டமைத்துள்ளது. இரண்டு பகுதியாக தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்டை இணைக்கும் பணி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ராக்கெட்டின் உயரம் 400 அடி. இது 'சாட்டர்ன் வி' ராக்கெட்டை விட பெரியது. 'நாசா' சார்பில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்காக ராக்கெட்


மிகப்பெரிய ராக்கெட்



அமெரிக்காவின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை கட்டமைத்துள்ளது. இரண்டு பகுதியாக தயாரிக்கப்பட்டுள்ள ராக்கெட்டை இணைக்கும் பணி சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ராக்கெட்டின் உயரம் 400 அடி. இது 'சாட்டர்ன் வி' ராக்கெட்டை விட பெரியது. 'நாசா' சார்பில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்காக ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது 75 'மெகாநியூட்டன்ஸ்' அளவுக்கு உந்துதலை வெளிப்படுத்தும். இது மற்ற ராக்கெட்டை விட இரண்டு மடங்கு அதிகம்.

**********************


தகவல் சுரங்கம்



வீரமான கப்பல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் தன் முதல் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. இக்கப்பல் வடிவமைப்பு 1999ல் ஆரம்பமானது. தயாரிப்பு பணி 2013ல் தொடங்கியது. 'விக்ராந்த்' என்றால் 'வீரம்' எனப் பெயர். 'என்னை எதிர்த்து சண்டையிடுபவர்களை நான் வீழ்த்துவேன்' என்பது இதன் குறிக்கோள். இது ரிக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கான செலவு ரூ. 23 ஆயிரம் கோடி. இது 45 ஆயிரம் டன் எடையை தாங்கும். நீளம் 860 அடி. அகலம் 203 அடி. உயரம் 194 அடி. மணிக்கு 56 கி.மீ., வேகத்தில் செல்லும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X