சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., ரெய்டு நடத்தி ரூ 6 லட்சம்;கொள்ளையடித்த வருமான வரித்துறை ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை:ஆற்காட்டில் ஐ.டி., ரெய்டு 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வருமன வரித்துறை ஊழியர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கண்ணன், 50; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ஜூலை 30ம் தேதி மதியம் 2:00 மணிக்கு இனோவா காரில் ஒரு பெண் உள்ளிட்ட ஆறு பேர் வந்தனர். தாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருவதாக கூறி, வீட்டை சோதனை செய்து 6
 ஐ.டி., ரெய்டு நடத்தி ரூ 6 லட்சம்;கொள்ளையடித்த வருமான வரித்துறை ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது

ராணிப்பேட்டை:ஆற்காட்டில் ஐ.டி., ரெய்டு 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வருமன வரித்துறை ஊழியர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கண்ணன், 50; பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். ஜூலை 30ம் தேதி மதியம் 2:00 மணிக்கு இனோவா காரில் ஒரு பெண் உள்ளிட்ட ஆறு பேர் வந்தனர். தாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருவதாக கூறி, வீட்டை சோதனை செய்து 6 லட்சம் ரூபாயை குழுவினர் எடுத்துச் சென்றனர்.

வேலுார் வருமான வரித்துறை அலுவலகத்தில் கண்ணன் விசாரித்தில், அதுபோல எந்த குழுவையும் சோதனைக்கு அனுப்பவில்லை என தெரிவித்தனர். ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் கண்ணன் புகார் செய்தார். ஐந்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.கண்ணன் வீட்டில் உள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில், கண்ணமங்கலம் கூட்டு சாலையில், பிரியாணி கடை நடத்தி வரும் எழிலரசு, 40, என்பவர் அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது. எழிலரசை பிடித்து விசாரித்தனர். அதில் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி கொள்ளையடித்தது தெரியவந்தது.

இது குறித்து ஆற்காடு போலீசார் இன்று கூறியதாவது: கடந்தாண்டு கண்ணன் வீட்டில் எழிலரசு குடியிருந்தார். அப்போது அவர் ஏராளமான பணம் வைத்துள்ளது தெரிந்ததால், அவரிடம் பணத்தை கொள்ளையடித்த திட்டமிட்டார். இதற்காக நண்பர்களான ஆற்காடு பாரத், 44, சென்னை முகப்பேரை சேர்ந்த மாது, 35, ஜமலியா நகரை சையத் கலீல்லை துப்பா, 33, புதுப்பேட்டை முபினா, 37, என்ற பெண் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு சென்னை வருமான வரி தலைமையிடத்தில்முதுநிலை உதவி உதவியாளராக பணியாற்றி வரும் ராமகிருஷ்ண யாதவ் வயது 58 என் பேர் உடனடியாக கேட்டுள்ளனர் அதற்கு அவர் வருமானவரி அதிகாரிகள் போல நடித்து பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டு பயிற்சியையும் கொடுத்துள்ளார்.
இதற்காக தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை அடிக்கடி பார்த்து உள்ளனர். பின் கடந்த 30ஆம் தேதி கண்ணன் வீட்டுக்கு ஆறு பேரும் சென்று வருமானவரித்துறையினர் போல நடித்து ஆறு லட்சம் ரூபாய் கொள்ளை அடித்ததும் இதற்காக நம்பர் பிளேட் மாற்றப்பட்ட காரையே பயன்படுத்தியுள்ளனர் கொள்ளையடித்த பணத்தை திட்டம் போட்டு கொடுத்த ராமகிருஷ்ணன் யாதவ் இருக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து மீதி பணத்தை மற்றவர்கள் சரி சமமாக பிரித்துக் கொண்டனர்.
இதுபோல மேலும் பல இடங்களில் கொள்ளை அடிக்க பட்டியல் போட்டு வைத்துள்ளனர் இந்த வழக்கில் ராமகிருஷ்ண யாதவ் எழிலரசு பாரத் மாது சையத்கலீல் லை துப்பா முபினாஎன்ற பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் தேடப்பட்டு வருகின்றனர் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X