சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
'எந்த ஆட்சி நடந்தால் என்ன, மக்கள் மனநிலை மாற வேண்டும்; அது தான் அவசியம்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும், ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது. தமிழக முன்னேற்றத்துக்கு ஊறு விளைவிக்கும் ஜாதி வெறியர்கள் மீது முதல்வர் கடுமையாக

பேச்சு, பேட்டி, அறிக்கை

'எந்த ஆட்சி நடந்தால் என்ன, மக்கள் மனநிலை மாற வேண்டும்; அது தான் அவசியம்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை: அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும், ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பது வேதனை அளிக்கிறது. தமிழக முன்னேற்றத்துக்கு ஊறு விளைவிக்கும் ஜாதி வெறியர்கள் மீது முதல்வர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'இது தான், பெரும்பாலான மக்களின் கருத்தும் கூட...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு அறிக்கை:
நம் நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை கருதி, இனிமேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பது என் கருத்து. கொரோனாவை பக்குவமாக கையாளும் அனுபவம் நம் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உள்ளது. எனவே, மீண்டும் ஊரடங்கு வேண்டாம் என கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.


'கூட்டம் சேர்வது தான், மூன்றாவது அலையை வரவேற்கும். ஆனாலும், கட்சியினர் திருந்த மாட்டேன் என்கின்றனரே...' என, கூறத் துாண்டும் வகையில், இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ராஜா பேட்டி:
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. ஓரிரு மாதங்களில் மூன்றாவது அலை வந்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, தடுப்பூசி, தனிமனித இடைவெளியை கடைபிடித்து, மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க வேண்டும்.


'இஸ்ரேல் நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம். ஆனால், நம்மை விட அதிகமாக விளைவிக்கின்றனர். அந்த தொழில்நுட்பத்தை, இந்த விவசாயிகள் கற்க வேண்டும்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன் பேட்டி:
மேட்டூர் அணை நீரை நம்பி, டெல்டா பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்களில், 1 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் கிடைக்காததால் சாகுபடி பொய்த்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காவிரி மேலாண்மை வாரியமே பொறுப்பேற்க வேண்டும்.


'அவர் சொன்னபடி, வறுமை ஒழிந்து விட்டால், காங்கிரசுக்கு வேலையில்லாமல் போய் விடுமே...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் ரவி அறிக்கை
: முன்னாள் பிரதமர் இந்திரா, 1971 லோக்சபா தேர்தலிலேயே, 'வறுமையை ஒழிப்போம்' என்று கூறி, ஆட்சிக்கு வந்தார். எனினும் அவர் சொன்னபடி செய்யவில்லை. அதனால் தான் இப்போதும் காங்கிரஸ், வறுமையை ஒழிப்போம் என்று கூறி, மக்களை திசைதிருப்பி வருகிறது.



'தடுப்பூசி போலவே, தடுப்பூசி இணையதளமும் அற்புதமாக செயல்படுகிறது என்கிறீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர் அறிக்கை:
மத்திய அரசின் தடுப்பூசி இணையதளமான, 'கோவின்' அற்புதமாக செயல்படுகிறது. சான்றிதழ் 'டவுன்லோடு' செய்ய, ஒரு எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், ஓ.டி.பி., எண் வருகிறது. அடுத்த வினாடி சான்றிதழும் வந்து விடுகிறது. அருமை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X