பொது செய்தி

தமிழ்நாடு

தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுப்பு: மக்களின்றி காவிரி ஆறு 'வெறிச்'

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மோகனூர்: ஆடி அமாவாசையான நேற்று, தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம்

மோகனூர்: ஆடி அமாவாசையான நேற்று, தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.


ஒவ்வொரு மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலுக்கு, ஆடி, தை, புரட்டாசி அமாவாசை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர். காவிரி ஆற்றின் கரையில் அமர்ந்து, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். ஆடி அமாவாசையான நேற்று, காவிரி ஆற்றில், தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், காவிரி ஆறு வெறிச்சோடி காணப்பட்டது. குமாரபாளையம், பள்ளிபாளையம், ஜேடர்பாளையம், ப.வேலூர் காவிரி கரைகளிலும் வெறிச்சோடின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X