பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் கோவில்கள் நடையடைப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
நாமக்கல்: அடி அமாவாசையான நேற்று, நாமக்கல் கோவில்களின் நடை அடைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் கொரோனா தடுப்பு நடவடிககையாக ஆடி வெள்ளியான ஆக. 6, 13ம் தேதிகளும் ஆடி அமாவாசையான நேற்றும், நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர், அரங்கநாதர், நரசிம்மர்,

நாமக்கல்: அடி அமாவாசையான நேற்று, நாமக்கல் கோவில்களின் நடை அடைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் கொரோனா தடுப்பு நடவடிககையாக ஆடி வெள்ளியான ஆக. 6, 13ம் தேதிகளும் ஆடி அமாவாசையான நேற்றும், நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர், அரங்கநாதர், நரசிம்மர், பலப்பட்டறை மாரியம்மன், மோகனூர் நாவலடியான், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் உள்ளிட்ட மாவட்டம் பல கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டன. அப்படியிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியில் நின்று சுவாமி கும்பிட்டு சென்றனர். வழிபாட்டுத்தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராமப்பகுதியில் மட்டும் ஒருசில கோவில்கள் திறந்திருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X