பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலை செல்ல தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, ஆடி அமாவாசை மற்றும் ஞாயிற்றுகிழமை என்பதால், தடையை பொருட்படுத்தாமல், கொல்லிமலைக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு முதல் அடிவாரப்பகுதியான

எருமப்பட்டி: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கொல்லிமலைக்கு செல்ல சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, ஆடி அமாவாசை மற்றும் ஞாயிற்றுகிழமை என்பதால், தடையை பொருட்படுத்தாமல், கொல்லிமலைக்கு செல்ல நேற்று முன்தினம் இரவு முதல் அடிவாரப்பகுதியான காரவள்ளியில் மக்கள் குவிந்தனர். இதையடுத்து, டி.எஸ்.பி., சுரேஷ் உத்தரவின் பேரில் அங்கு சென்ற சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் கொல்லிமலை நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைத்தனர். மலைக்கு சுற்றுலா சென்றவர்களையும், கோவில்களுக்கு சென்றவர்களையும் தடுத்து திருப்பி அனுப்பினர். அதன்படி, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கொல்லிமலையை சேர்ந்தவர்கள் தகுந்த அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே கொல்லிமலைக்கு செல்ல அனுமதித்தனர். இதேபோல், வனத்துறை சார்பிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X