பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு வாரம் ப.வேலூரில் கடைப்பிடிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், ஆக., 1 - 8 வரை கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி தினசரி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகள், ப.வேலூர் நான்கு சாலை, பல்வேறு இடங்களில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செயல் அலுவலர் சுப்ரமணியன், பொது சுகாதார

ப.வேலூர்: ப.வேலூர் தாலுகா இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில், ஆக., 1 - 8 வரை கொரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. அதனையொட்டி தினசரி பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக கடைகள், ப.வேலூர் நான்கு சாலை, பல்வேறு இடங்களில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செயல் அலுவலர் சுப்ரமணியன், பொது சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை மற்றும் சுகாதார துறை சார்பில் ஓவியப்போட்டி நடந்தது. கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு, ப.வேலூர் தாசில்தார் அப்பன்ராஜ் பரிசுப்பொருட்கள் வழங்கினார். பரமத்தி அடுத்த பிள்ளைகளத்தூரில் உள்ள தனியார் நூற்பாலை தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X