பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் அருகே, 'நலமான நமது கிராமம் இலக்கமநாயக்கன்பட்டி' என்ற, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட தேசிய நலக் குழுமத் தொடர்பு அலுவலர் ரங்கநாதன் தலைமை வகித்து பேசும்போது, ''கொரோனாவினால் ஏற்படும் இறப்பில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில், இறப்பு மிகக் குறைவு. அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,''

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையம் அருகே, 'நலமான நமது கிராமம் இலக்கமநாயக்கன்பட்டி' என்ற, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட தேசிய நலக் குழுமத் தொடர்பு அலுவலர் ரங்கநாதன் தலைமை வகித்து பேசும்போது, ''கொரோனாவினால் ஏற்படும் இறப்பில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில், இறப்பு மிகக் குறைவு. அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்,'' என்றார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் பேசியதாவது: முதல் அலையில் கிராமங்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டது. இரண்டாம் அலையில் கிராமப்புற மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவற்றை கருத்தில் கொண்டு தடுப்பூசிகள், கிராமங்களுக்கே சென்று மக்களுக்கு செலுத்தப்படுகிறது. கிராம சுகாதார மன்றங்களை இளைஞர்கள் ஏற்படுத்துங்கள். தடுப்பூசி அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமாக மாற்றுங்கள். இந்த கிராமத்தில், 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டது மகிழ்ச்சி. 100 சதவீதத்தையும் முடித்து, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X