பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்துள்ள சவுந்தராபுரத்தில், போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேலம்பாடி பஞ்., தலைவர் ராணி தலைமை வகித்தார். கரூர் எஸ்.பி., சுந்தரவடிவேல் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் - போலீசார் ஒத்துழைப்பு மிக அவசியமான ஒன்று. அதற்காக போலீசார் சார்பில், கிராம காவலர் என்ற பணியிடம் செயல்படுத்தப்பட்டு, காவலர்கள்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்துள்ள சவுந்தராபுரத்தில், போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வேலம்பாடி பஞ்., தலைவர் ராணி தலைமை வகித்தார். கரூர் எஸ்.பி., சுந்தரவடிவேல் பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் - போலீசார் ஒத்துழைப்பு மிக அவசியமான ஒன்று. அதற்காக போலீசார் சார்பில், கிராம காவலர் என்ற பணியிடம் செயல்படுத்தப்பட்டு, காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள குறைகளை, அவர்களிடம் கூறி அதிகாரிகளை அணுகலாம். சிறிய வயதில், பெண் குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, பள்ளபட்டி அண்ணாநகர் பகுதியில் போலீஸ் - பொதுமக்கள் இணைந்து அமைத்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன், கிராம காவலர் பேபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X