பொது செய்தி

தமிழ்நாடு

நல வாரியத்தில் பதிவு கட்டணத்தில் விலக்கு: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தகவல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கரூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், கரூர் மாவட்ட தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழக வணிகர் நல வாரியத்தின் மூலம் குடும்ப நலத்திட்டம், மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி, விளையாட்டு போட்டி, தீ விபத்துக்கான நஷ்டயீடு, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என, ஏழு வகையான நலத்திட்டங்கள்

கரூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், கரூர் மாவட்ட தலைவர் ராஜூ, செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழக வணிகர் நல வாரியத்தின் மூலம் குடும்ப நலத்திட்டம், மருத்துவ உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி, விளையாட்டு போட்டி, தீ விபத்துக்கான நஷ்டயீடு, நலிவுற்ற வணிகர்களுக்கு நிதி உதவி, சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என, ஏழு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 8,873 வணிகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) சட்டத்தின் கீழ் பதிவு பெற்றவர்களும், ஜி.எஸ்.டி.,யில் பதிவு பெறாத குறு வணிகர்களும், நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேரவும், பதிவு கட்டணத்தொகை மூன்று மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை www.tn.gov.in/tntwb என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தகுந்த சான்றுகளை இணைத்து, வணிகர் சங்கத்திலோ அல்லது வணிக வரி அலுவலகத்திலோ ஒப்படைக்கலாம். புதிய உறுப்பினர் சேர்க்கையினை, நேரடியாக இணைய வழியே மேற்கொள்ளவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X