பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் சணப்பிரட்டிக்கு குடிநீர் திட்டம் வருமா?

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 10 ஆண்டுகளாகியும், பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் இல்லை. இதனால், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், சணப்பிரட்டிக்கு புதிய குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 2011ல், நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து, நான்கு வார்டுகளாக

கரூர்: கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, 10 ஆண்டுகளாகியும், பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் இல்லை. இதனால், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், சணப்பிரட்டிக்கு புதிய குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த, 2011ல், நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது, சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்து, நான்கு வார்டுகளாக பிரிக்கப்பட்டு, கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. புதிதாக, 33,34,35,36 ஆகிய நான்கு வார்டுகள் உருவானது. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சி பகுதிக்கு, 64 கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் துவக்கப்பட்டன. இதில், பழைய கரூர் நகராட்சி மற்றும் தாந்தோன்றிமலை பகுதிகளில், பணிகள் நிறைவு பெற்றுள்ளன. பழைய இனாம் கரூர் நகராட்சியில், புதிய குடிநீர் திட்டப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட, பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்துக்கு புதிய குடிநீர் திட்டம் அறி விக்கப்படவில்லை. இதனால், மூன்று நாட்கள் முதல், ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சணப்பிரட்டி பகுதி மக்கள் கூறுகையில், ' கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு, சணப்பிரட்டி பகுதியில் உள்ள நான்கு வார்டுகளும் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் உள்ளது. தனிக்குடிநீர் திட்டம் கிடப்பில் உள்ளது. குறிப்பிட்டு சொல்லும் அளவில், அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக, சணப்பிரட்டி பகுதிக்கு, கட்டளை காவிரியாற்று பகுதியில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக நீக்க தனி குடிநீர் திட்டத்துக்கு, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், நிதி ஒதுக்க வேண்டும்' என்றனர்.


* பழைய சணப்பிரட்டி பஞ்சாயத்து பகுதியில் உள்ள, நான்கு வார்டுகளுக்கும் சேர்த்து, ஆறு கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கிடப்பில் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X