பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு நீர் வரத்து குறைவு; அமராவதி அணையிலும் திறப்பு குறைப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக ஜூன், 12ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட் டது. துவக்கத்தில் வினாடிக்கு, 3,000 கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. பிறகு, கர்நாடகா மாநில அணைகளில் இருந்து குறைந்தளவே,

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. அமராவதி அணையில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக ஜூன், 12ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட் டது. துவக்கத்தில் வினாடிக்கு, 3,000 கன அடியில் இருந்து, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. பிறகு, கர்நாடகா மாநில அணைகளில் இருந்து குறைந்தளவே, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. இதனால், திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணி நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 13 ஆயிரத்து, 346 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, 13 ஆயிரத்து, 82 கன அடியாக குறைந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 462 கன அடியும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 670 கன அடியும் திறக்கப்பட்டது.

அமராவதி அணை நிலவரம்: கரூர் மாவட்ட குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக, உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த மே, 20 முதல் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 2,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கேரளா மாநிலம் உள்ளிட்ட, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால், அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட, தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு வினாடிக்கு, 993 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில், 300 கன அடியும், புதிய வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 87.80 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X