கார் விபத்தில் ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் விபத்தில் ஒருவர் பலி

Added : ஆக 09, 2021
Share
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி கேசவன், 76, என்பவர் மாருதி ஆல்டோ காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மதியம், 12:30 மணியளவில் ஈசநத்தம் பிரிவு அருகே கார் கடந்தபோது, அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து மதுரை நோக்கி கேசவன், 76, என்பவர் மாருதி ஆல்டோ காரில் சென்று கொண்டிருந்தார். நேற்று மதியம், 12:30 மணியளவில் ஈசநத்தம் பிரிவு அருகே கார் கடந்தபோது, அப்பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இறந்த நபர் குறித்து விபரம் தெரியவில்லை. இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X