அதிரவைக்கும் ஏர் ஹாரன்; பொதுமக்கள் தவிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கரூர்: வாகனங்களில் விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் ஒலியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கரூர் மாவட்டத்தில், ஜவுளி, பஸ் பாடி கட்டும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தினமும், 1,000க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடியாக காணப்படும். தனியார், அரசு மற்றும் மினி

கரூர்: வாகனங்களில் விதிமுறை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் ஒலியால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.


கரூர் மாவட்டத்தில், ஜவுளி, பஸ் பாடி கட்டும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தினமும், 1,000க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடியாக காணப்படும். தனியார், அரசு மற்றும் மினி பஸ்களில், 150 டெசிபல் அளவுக்கு மேலான, ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளது. இவை, சாலைகளில் நடந்து செல்பவர்களை அஞ்சி நடுங்க வைக்கும் விதமாக, அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு செல்கின்றன. பஸ்கள் மட்டுமின்றி, கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களிலும், ஏர் ஹாரன்களை பொருத்தி, நகரப்பகுதி சாலைகளில் அலறவிடுகின்றனர். இதனால், சாலை விபத்துகள் ஏற்படுவது மட்டுமல்லாது, மனிதருக்கு கேட்கும் திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X