நாட்டின் கடன் சுமை எவ்வளவு? நிர்மலா சீதாராமன் தகவல்!

Updated : ஆக 11, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (37)
Advertisement
புதுடில்லி :நாட்டின் மொத்த கடன் சுமை 119.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:கடந்த 2020 - 2021ம் நிதியாண்டின்படி நாட்டின் மொத்த கடன் சுமை 119 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஜி.டி.பி.
நாடு, கடன் சுமை , நிர்மலா சீதாராமன் தகவல்!

புதுடில்லி :நாட்டின் மொத்த கடன் சுமை 119.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:கடந்த 2020 - 2021ம் நிதியாண்டின்படி நாட்டின் மொத்த கடன் சுமை 119 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இது ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60.5 சதவீதம்.கடன் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிதி பற்றாக்குறையை தற்போதுள்ள 6.8 சதவீதத்தில் இருந்து 2025 - 2026ம் நிதிஆண்டில் 4.5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரி வசூலை அதிகரிப்பது மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் நிலங்களை விற்பனை செய்வது ஆகியவற்றின் வாயிலாக கடன்களை குறைக்க முயற்சி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில் 'கடந்த 2015ல் அறிமுகம் செய்யப்பட்ட தங்க பத்திர விற்பனை வாயிலாக இதுவரை 31 290 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
11-ஆக-202112:08:39 IST Report Abuse
ganapati sb மத்தியில் 120 லட்சம் கோடி கடனென்றால் 120 கோடி மக்களுக்கு ஒருவர் தலையில் 1 லட்சம் கோடி கடனா? தமிழகத்தின் கடனால் ஒரு குடும்பத்திற்கு 2 லட்சம் கடன் என்பது பரவாயில்லை போல உள்ளதே .
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
10-ஆக-202120:52:18 IST Report Abuse
J.Isaac ஆருர் அவர்களே நாட்டு மக்கள் அனைவரும் உங்கள் இனத்தை சேர்ந்தவர்களை போல் நிபுணர்கள் அல்லவே.
Rate this:
Cancel
Rajamani K - Chennai,இந்தியா
10-ஆக-202117:50:41 IST Report Abuse
Rajamani K பரவாயில்லை. இது தமிழக அரசுகளால் ஏற்பட்ட கடனை வீட குறைவுதான். சுமார் 88000 மட்டுமே.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
10-ஆக-202119:24:27 IST Report Abuse
Dhurveshஅந்த மோடிக்கு தனி சொகுசு விமானம் 8400 கோடி சொகுசு வீடு 50000 கோடி / கார்பொரேட் 68000 கோடி தளபதி எல்லாம் சேர்த்தா இன்னும் சேர்க்க வில்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X