சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சமுதாய அடுப்பங்கரை வேண்டும்!

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
'பெண்களைப் போல ஆண்களும் சமைக்க வேண்டும்; பெண்களை சமையல் கட்டிலிருந்து அகற்ற வேண்டும்' என்பது போன்ற குரல்கள் வலுத்து வரும் நேரமிது. பெண்கள் மட்டும் சமைப்பது சரி தானா என கூறுகிறார் பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா: ஒரு தலைமுறைக்கு முன் வரை இட்லி என்பது தீபாவளிக்கு செய்யப்படும் பண்டமாகத் தான் இருந்தது. ஆனால் இன்றோ காலையிலும் இரவிலும் உண்ணப்படும் உணவாக மாறி
சொல்கிறார்கள்

'பெண்களைப் போல ஆண்களும் சமைக்க வேண்டும்; பெண்களை சமையல் கட்டிலிருந்து அகற்ற வேண்டும்' என்பது போன்ற குரல்கள் வலுத்து வரும் நேரமிது. பெண்கள் மட்டும் சமைப்பது சரி தானா என கூறுகிறார் பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா: ஒரு தலைமுறைக்கு முன் வரை இட்லி என்பது தீபாவளிக்கு செய்யப்படும் பண்டமாகத் தான் இருந்தது. ஆனால் இன்றோ காலையிலும் இரவிலும் உண்ணப்படும் உணவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் வயல்காட்டுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் இரவில் ஒரு வேளை தான் உணவு சமைத்தனர். அதுவும் மொத்தமாக. இரவு சாப்பிட்டது போக காலை மற்றும் மதியத்திற்கும் சேர்த்து சோறு சமைத்து அதை மூன்று வேளையும் சாப்பிட்டனர்.ஆனால் இன்றைய பெண்களுக்கு மூன்று வேளையும் சமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமையல் என்ற பெயரில் பெண்களின் ஆற்றல் தொடர்ந்து சுரண்டப்படுகிறது.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நான் என் சமையல் வேலைகளை சுருக்கிக் கொண்டேன். இட்லி என்றால் ஒரு சட்னி தான். மதியத்திற்கு ஒரு குழம்பு ஒரு பொரியல் தான் செய்வேன். இப்படி சமையல் கட்டுக்குள் என் நேரத்தை குறைத்துக் கொண்டதால் என்னால் நிறைய படிக்க முடிந்தது; வேலை செய்ய முடிந்தது.


நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்:



1965ல் மலேஷியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த போது மிகவும் மோசமான பொருளாதார நிலையில் தான் இருந்தது. 'நாட்டில் எத்தனை கைகள் உள்ளனவோ அத்தனையும் உழைக்க வேண்டும்' என அப்போதைய பிரதமர் அழைப்பு விடுத்தார்.அதன்படி வீடுகளின் சமையல் கட்டு கள் மூடப்பட்டன; நாட்டின் பொருளாதாரம் வளரத் துவங்கியது. நம் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன் நீர் நிலைகளைத் தேடிச் சென்று பெண்கள் குடங்களில் நீர் கொண்டு வந்து சமையல் செய்தனர். நீர் விறகு சேகரிக்கும் வேலையை செய்து முடிக்கவே அரை நாள் ஆகிவிடும். வீடுகளுக்குள் தண்ணீர் சமையல் காஸ் வந்ததும் பெண்களுக்கு சமையல் வேலையும் எளிதானது.பெண்கள் வேலை பார்க்க வெளியிடங்களுக்கு செல்லத் துவங்கினர். இதனால் பொருளாதாரம் வளரத் துவங்கியது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணும் சமையல் செய்து வைத்த பிறகு தான் வேலைக்கு செல்கிறாள். எனவே சமையலை ஒவ்வொரு வீட்டிலும் செய்வதற்குப் பதில் சமுதாய அடுப்பங்கரை எனப்படும் 'கம்யூனிட்டி கிச்சனாக' மாற்றினால் பெண்களுக்கு இன்னும் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்படும். பெண்களுடன் சேர்ந்து நாடும் பொருளாதாரமும் முன்னேறும்!

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - Chennai,இந்தியா
10-ஆக-202117:19:39 IST Report Abuse
Bala உங்களுக்கு எளிதாக இருப்பதற்காக தானே காஸ் அடுப்பு, மிக்ஸி கிரைண்டர் எல்லாம் . அப்புறம் ஏன் சமையல் வேலையை ஆண்கள் தலையில் கட்ட பார்க்கிறீர்கள். பிறகு நீங்கள் என்ன வேலையை செய்வீர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காதீங்கம்மா
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
10-ஆக-202111:42:10 IST Report Abuse
தமிழ்வேள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொருவிதமான உணவு பழக்கம் நிலவும் நாடு இது ...அப்படி இருக்க ஒரேமாதிரி சமையல் கூடம் எப்படி ஒத்துவரும் ?
Rate this:
Cancel
திருட்டு திராவிடன் அம்மா பர்வீன் நீ எல்லாத்தையும் சுருக்கிக்கோ. எதற்கு நல்ல பெண்களை கெடுக்கிறாய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X