மாஜி அமைச்சர் வேலுமணி மீது போலீசில் புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் வேலுமணி மீது போலீசில் புகார்

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (9)
Share
சென்னை : அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 51; தொழில் அதிபர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்த புகார்: அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, 2002ல் எனக்கு பழக்கமானார். 2016 ஜனவரியில், கமிஷன்
மாஜி அமைச்சர் வேலுமணி ,போலீசில் புகார்


சென்னை : அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் திருவேங்கடம், 51; தொழில் அதிபர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்த புகார்:

அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, 2002ல் எனக்கு பழக்கமானார். 2016 ஜனவரியில், கமிஷன் கொடுத்தால் சாலை பராமரிப்பு, செப்பனிடுதல், கழிவு நீர் வெளியேற்றம் என, சிவில் ஒப்பந்த பணிகளை அரசிடம் இருந்து பெற்றுத்தருவதாக கூறினார்.


latest tamil news




இப்பணிகளுக்காக, 2016 மார்ச், 4ல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில், வேலுமணியிடம், 1 கோடி ரூபாய் கொடுத்தேன்.பின், ஜூலை, 15ல், 20 லட்சம் ரூபாய் கொடுத்தேன். வேலுமணி தெரிவித்ததால், அவரது உதவியாளர் பார்த்திபனிடம், 5 லட்சம் ரூபாய்
கொடுத்தேன்.ஆனால், அமைச்சர் வேலுமணி எனக்கு ஒப்பந்த பணிகளையும் பெற்றுத்தரவில்லை; வேறு சில ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்து விட்டனர்.இதனால், வேலுமணியை பல முறை சந்தித்து, பணத்தை திரும்ப கேட்டேன்.'அவசரப் படாமல் இருங்கள்; பணிகளை ஒதுக்கி தருகிறேன்' எனக்கூறி, காலம் தாழ்த்தி வந்தார். இந்த ஆண்டு ஜூன், 20ல், கோவையில் உள்ள வீட்டில் வேலுமணியை சந்தித்தேன். அப்போது, 'ஆட்சி மாறிவிட்டது; இனி எப்படி பணி ஒதுக்குவீர்கள்' என, கேட்டேன். '20 நாட்களில் பணத்தை தந்து விடுகிறேன்'
என்றார்.
பின், வேலுமணியின் மூத்த சகோதரர் அன்பரசனை சந்தித்தேன், இதன் விளைவாக, என் வங்கி கணக்கிற்கு, 5 லட்சம் ரூபாய் அனுப்பினார்.மீதி பணத்தை கேட்க, ஜூலை, 11ல், வேலுமணியை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றேன்; அங்கு அவர் இல்லை. வீட்டில் இருந்தோர், வேலுமணியின் உதவியாளர்கள் சந்திரசேகர், வினோத் ஆகியோரை சந்திக்குமாறு கூறினர்.
அவர்களை சந்தித்தபோது, 'உங்கள் பணத்தை சில தினங்களில் தந்து விடுவதாக வேலுமணி கூறியுள்ளார்' என்றனர்.அதன்பின், வேலுமணியை சந்தித்தபோது, 'இனிமேல் பணம் தொடர்பாக என்னை சந்திக்கக்கூடாது. என் செல்வாக்கு பற்றி உனக்கு நன்றாகவே தெரியும். உன்னையும் உன் குடும்பத்தையும், 'அட்ரஸ்' இல்லாமல் செய்து விடுவேன்' என, கொலை மிரட்டல் விடுத்தார்.
வேலுமணி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X