சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் வீட்டில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வேலுார்:வேலூர் மாவட்டம்கடந்த 2ஆம் தேதி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகம் எதிரே உள்ள ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மனோகரன். தனியார் பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி கனிமொழி. இவர்கள் 2 மகள்களுடன் கடந்த 1-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து அங்கு வந்தனர்.முகமூடி கும்பல் ஆசிரியர் வீட்டின் கதவை தட்டினர்.சத்தம்

வேலுார்:வேலூர் மாவட்டம்கடந்த 2ஆம் தேதி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகம் எதிரே உள்ள ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மனோகரன். தனியார் பள்ளி ஆசிரியர். இவருடைய மனைவி கனிமொழி. இவர்கள் 2 மகள்களுடன் கடந்த 1-ந் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து அங்கு வந்தனர்.

முகமூடி கும்பல் ஆசிரியர் வீட்டின் கதவை தட்டினர்.சத்தம் கேட்டு கண்விழித்த மனோகரன் வீட்டு கதவை திறந்தார்.அப்போது தயாராக இருந்த கொள்ளை கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மனோகரனை வீட்டுக்குள் தள்ளி தாக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் ,மோதிரம் உள்ளிட்ட 6 சவரன் நகைகளை பறித்து சென்று விட்டனர் இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்

இந்தநிலையில் காட்பாடி பகுதியில் பதுங்கியிருந்த எஸ்.எஸ்.கே மானியம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 25) மற்றும்ரமேஷ் (24 ) வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த அர்ஜுன் (24) சைதாப்பேட்டை சமீர் (20)வசந்த புரத்தைச் சேர்ந்த தனுஷ்( 18) ஆகியோரை மடக்கி பிடித்தனர் .விசாரணையில் இவர்கள் ஆசிரியர் மனோகரனிடம் நகை பறித்து சென்றது தெரிய வந்தது.5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X