அரசியல் செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனையை மேம்படுத்த பா.ஜ., கோரிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர பா.ஜ., விவசாய அணி செயற்குழு கூட்டம், துணைத்தலைவர் சேதுபதி தலைமையில் நடந்தது. கட்சியின் நகர தலைவர் மணிகண்டகுமார் முன்னிலை வகித்தார். நகர பொதுச் செயலாளர் கார்த்திகேயன் சிவானந்தன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:வேளாண் சார்ந்த துறைகளின் அரசு திட்டங்கள் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர பா.ஜ., விவசாய அணி செயற்குழு கூட்டம், துணைத்தலைவர் சேதுபதி தலைமையில் நடந்தது. கட்சியின் நகர தலைவர் மணிகண்டகுமார் முன்னிலை வகித்தார். நகர பொதுச் செயலாளர் கார்த்திகேயன் சிவானந்தன், மாவட்ட செயலாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:வேளாண் சார்ந்த துறைகளின் அரசு திட்டங்கள் குறித்து, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயனடைய ஏற்பாடு செய்ய வேண்டும். வனத்துறை மற்றும் ரயில்வே துறையுடன் இணைந்து சமூக காடுகள் உருவாக்க வேண்டும்.நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் கிணறுகளை கணக்கெடுத்து, தண்ணீரின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.விநாயகர் சதுர்த்தியின் போது, களிமண்ணில் விதைகள் கலந்த விநாயகர் சிலைகளை வீடுகளுக்கு வழங்கி, பசுமையை அதிகரிக்க வேண்டும்.பொள்ளாச்சி பிரதான கால்நடை மருந்துவமனையை, பன்முக சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்த, கால்நடை பராமரிப்பு துறைக்கு மனு அனுப்பி வலியுறுத்த வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X