தண்டவாளத்தில் அத்துமீறல் வேண்டாம்! ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் அத்துமீறல் வேண்டாம்! ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு

Added : ஆக 09, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே வழித்தடங்களின் அருகே, தண்டவாளத்தில் அத்துமீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து, ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சோதனைக்காக, மின்கடத்திகளில் அவ்வப்போது உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. எப்போது
 தண்டவாளத்தில் அத்துமீறல் வேண்டாம்! ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே வழித்தடங்களின் அருகே, தண்டவாளத்தில் அத்துமீறுவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து, ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் நலச்சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சோதனைக்காக, மின்கடத்திகளில் அவ்வப்போது உயரழுத்த மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும், மின்ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படலாம்.இந்நிலையில், மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதையின் அபாயம் தெரியாமல், பலரும் தண்டவாளங்களில் பொழுதுபோக்குவது, கால்நடை மேய்ப்பது என அத்துமீறுகின்றனர்.இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து, ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி., ஜெயகவுரி, எஸ்.பி., தீபா சத்யன், டி.எஸ்.பி., யாஸ்மின் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி ரயில்வே போலீசார் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.ரயில்வே போலீஸ் ஏட்டு திருப்பதி, பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களும் பிரசாரத்தில் பங்கேற்றனர்.பொதுமக்கள் அதிகம் தண்டவாளத்தில் அத்துமீறும் பகுதிகளான பத்திரகாளியம்மன் கோவில் ரயில்வே கேட், கோட்டூர் ரோடு மேம்பாலம், குமரன் நகர், வடுகபாளையம் வடக்கு ரயில்வே கேட் அருகில் வசிக்கும் மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டனர்.தண்டவாளத்தில் அத்துமீறி பிரவேசிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்கியதுடன், குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. விழிப்புணர்வு நோட்டீஸ்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X