அரசியல் செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்க காங்., வலியுறுத்தல்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், என, காங்., கட்சி வலியுறுத்தியுள்ளது.கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சியின், புதிய நிர்வாகிகள் அறிமுகம், ஆலோசனை கூட்டம், கிணத்துக்கடவு எஸ்.வி., மகாலில் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கிணத்துக்கடவு தாலுகா

கிணத்துக்கடவு:கோவையில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், என, காங்., கட்சி வலியுறுத்தியுள்ளது.கோவை தெற்கு மாவட்ட காங்., கட்சியின், புதிய நிர்வாகிகள் அறிமுகம், ஆலோசனை கூட்டம், கிணத்துக்கடவு எஸ்.வி., மகாலில் நடந்தது. மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், வழக்கில் உள்ளது. வழக்கை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவையில் இருந்து, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக, தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மீனாட்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன்களை மதுரை கோட்டத்தில் இணைக்க வேண்டும்.ஆனைமலை - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆழியார் பூங்கா நுழைவுவாயிலில், பி.ஏ.பி., திட்டம் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை நிறுவ, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதின் பெயரை மாற்றம் செய்த, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X